எலுமிச்சை சாற்றை விட தோல் பெஸ்ட்: எப்படி பயன்படுத்துவது?

எலுமிச்சை சிட்ரிக் அமிலத் தன்மையை கொண்டுள்ளதால், இதிலிருந்து வரும் வலுவான நறுமனம் பாக்டீரியாவுக்கு எதிராக போராடி உடலில் துர்நாற்றத்தை தடுக்கும்.

Health Benifits of Lemon Peels : எலுமிச்சை நமக்கு நன்கு தெரிந்த ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின் சி என பல காரணங்களுக்காக நம் அன்றாட உணவுகளில் சேர்த்து வருகிறோம். ஆனால், எலுமிச்சை தோலில் உள்ள நன்மைகளை நாம் அறிந்திருக்கிறோமா என்றால், இல்லை என்பதே பதில். எலுமிச்சை தோல் எண்ணிலடங்கா மருத்துவப் பயன்களை கொண்டுள்ளதை நாம் தெரிந்துக் கொண்டால், அதை இனிமேல் தூக்கி எரிய மாட்டோம்.

அப்படி என்ன நன்மைகள் எலுமிச்சை தோலில் இருக்கு? இதோ தெரிஞ்சிக்கோங்க!

எலுமிச்சை சாறில் இருப்பதை விட, எலுமிச்சை தோலில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் செறிந்து காணப்படுகின்றன. இதனால், சாறை விட தோலில் தான் சத்துகள் அதிக அளவில் உள்ளது.

எலுமிச்சை தோலில் என்ன சத்துகளெல்லாம் இருக்கிறது?

எலுமிச்சைத் தோலில் 126 மி.கி அளவு வைட்டமின் சி உள்ளது. ஆனால், அதன் சாற்றில் 53 மி.கிராமே உள்ளது. எலுமிச்சைத் தோலில் கால்சியம் 134 மில்லிகிராம் உள்ள நிலையில், அதன் சாற்றில் 26 மி.கி அளவே உள்ளது. எலுமிச்சைத் சாற்றில் 138 மி.கி.பொட்டாசியம் உள்ள நிலையில், அதன் தோலில் 169 மி.கி.உள்ளது. 2.8 கி. அளவே எலுமிச்சை சாற்றில் நார்ச்சத்து உள்ள நிலையில், அதன் தோலில் 10 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. மேலும், சர்வதேச வைட்டமின் அளவீட்டின் படி, 50ஐயு சத்துகள் உள்ளன.

எலுமிச்சை தோலில் செறிந்துள்ள கரோட்டினாய்டு சத்து, வைட்டமின் ஏ சத்தாக மாறுவதால் கண்களுக்கு ஆரோக்கியமானதாக இருந்து வருகிறது. மேலும், எலுமிச்சையில் செறிந்து காணப்படும் வைட்டமின் சி சத்து வயதானவர்களில் ஏற்படும் கண் குறைபாடுகளுக்கு மருந்தாக அமைகிறது.

எலுமிச்சை தோல் பாக்டீரியா பரவும் தன்மையை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளதால் காயங்களுக்கு மருந்தாக அமைகிறது. எலுமிச்சை சிட்ரிக் அமிலத் தன்மையை கொண்டுள்ளதால், சர்க்கரை நோயாளிகளின் உடலில் ஏற்படும் புண்களுக்கு நேரடியாகவே தோலினை தேய்த்தால் புண்கள் விரைவில் குணமடையும்.

எலுமிச்சை சிட்ரிக் அமிலத் தன்மையை கொண்டுள்ளதால், இதிலிருந்து வரும் வலுவான நறுமனம் பாக்டீரியாவுக்கு எதிராக போராடி உடலில் துர்நாற்றத்தை தடுக்கும். இதற்கு எலுமிச்சை தோலில் உள்பகுதிகயை அக்குளில் தேய்த்துக் கொண்டால் துர்நாற்றம் விலகும். மேலும், எலுமிச்சை தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் பஞ்சினை நனைத்து அக்குளில் தடவினாலும் உடல் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

எலுமிச்சைத் தோலில் ஆஸ்ட்ரின்ஜென்ட் மற்றும் கிருமிகளைக் கொல்லும் ஆன்டிமைக்ரோபியல் ஆகியவை முகப்பரு வராமல் தடுக்க கூடியது. இதற்கு, புதினாவுடன் எலுமிச்சை தோலை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை முகத்தில் பூசி வரலாம்.

அதிக அளவிலான நார்ச்சத்து எலுமிச்சை தோலில் செறிந்துள்ளதால் அல்சர் மற்றும் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாக உள்ளது. மேலும், உடல் எடையை சீரக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

எலுமிச்சை தோலில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியத்துடன் சேர்ந்திருக்கும் பொட்டாசியம் ரத்தகுழாய் சுவர்களை தளர்வாக்குவதால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். எலுமிச்சைத் தோலில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் கெட்ட கொழுப்பான எல்.டி.எல்-ஐக் குறைப்பதால், இதயம் ஆரோக்கியமாக இருக்க உதகிறது.

எலுமிச்சை தோல் மூலம் தயாரிக்கப்படும் ஊறுகாய் உள்ளிட்டவற்றை சாப்பிட, சருமப் புற்றுநோய்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். . எலுமிச்சைத் தோலில் உள்ள கெளன்மரின் எனு,ம் எண்ணெய் பொருள் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டாக செயல்படுவதால், கேன்சர் மற்றும் உடல் உறுப்புகள், செல்களை பாதிக்கும் நோய்களிலிருந்தும் நம்மை காக்கும்.

கால்சியம் செறிந்துள்ளதால் எலும்புகளை பாதுகாக்கவும் எலுமிச்சை தோல் பயன்படுகிறது. மேலும், இதிலுள்ள வைட்டமின் சி பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

இன்னும் என்ன தயக்கம்? தூக்கி எரியும் தோலில் இவ்வளவு பயன்களா என வாயடைத்து திகைத்து நிற்கிறீர்களா? நாங்கள் சொன்ன முறைகள் மூலம் எலுமிச்சை தோலை பயன்படுத்தி பாருங்கள். நன்மைகளை பெறுவீர்கள்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Health benifits of lemon peels healthy life style

Next Story
கிராம்பு, எலுமிச்சை, கருவேப்பிலை… ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் கிச்சன் சீக்ரெட்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express