காலை உணவை சாப்பிட்ட பிறகு நீங்கள் எப்போதாவது வயிறு உப்பியது போல் உணர்கிறீர்களா? ஆம் என்றால், உங்கள் காலை உணவுவை மீண்டும் சரிபார்க்க வேண்டிய நேரமிது, உங்கள் வளர்சிதை மாற்றத்தை எளிதாக்கும் முயற்சியில், நீங்கள் உட்கொள்ளும் பல்வேறு உணவுகளைப் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்யலாம்.
ஒரு அற்புதமான காலை உணவுக்குப் பிறகு, நாள் முழுவதும் உள்ள வேலைக்கு நீங்கள் தயாராவீர்கள், ஆனால் சில நேரங்களில் உங்கள் வயிறு அதன் இயல்பான அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக உணர்கிறது. அதற்கு மேல், நீங்கள் பிடிப்புகள், வாயு மற்றும் ஏப்பம் போன்றவற்றை அனுபவிக்கலாம்.

இவை அனைத்தும் வயிறு உப்புதலின் சாத்தியமான அறிகுறிகள், ”என்று உணவியல் நிபுணர் ஜஸ்மீத் கவுர் இன்ஸ்டாகிராமில் கூறியிருந்தார்.
இந்த உணர்வைத் தவிர்க்க நிபுணர் மேலும் சில குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
கவுரின் கூற்றுப்படி, உடலில் இருந்து கழிவுகளை எளிதில் வெளியேற்ற அனுமதிக்க, இரைப்பை மற்றும் குடலை சுத்தப்படுத்த 200 மில்லி வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். கூடுதலாக, நீங்கள் மலச்சிக்கல் அல்லது வயிறு உப்புதல் பிரச்சினைகளை அனுபவித்தால், அதில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கலாம். செரிமானம் மற்றும் எடை குறைக்க, அரை எலுமிச்சை பழம் சேர்க்கவும். (எரியும் உணர்வு இருந்தால் எலுமிச்சை நீரை தவிர்க்கவும்).

ஒரு கிண்ணம் பச்சை பழங்கள் சாப்பிடலாம்; மலச்சிக்கலை குணப்படுத்த நீங்கள் ஆப்பிள் போன்ற ஸ்டூவ்டு ஃப்ரூட்ஸ் (stewed fruits) சாப்பிடலாம்.
ஆனால் அதை உணவுடன் சேர்த்து இல்லாமல் தனியாகச் சாப்பிடுங்கள், மேலும் உங்கள் உடல் அதை ஜீரணிக்க குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் கொடுங்கள். பழங்களில் உள்ள நுண்ணுயிர் நொதிகள், உங்கள் குடல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
ஒரு மணி நேரம் கழித்து, ஓட்ஸ், அப்பம், இட்லி, தோசை போன்ற சூடான, நன்கு சமைத்த காலை உணவை சாப்பிடுங்கள். காலை உணவாக பழங்கள் வேண்டாம். உங்கள் காலை உணவு சூடாகவும் சமைத்ததாகவும், அதில் சிறிது உப்பு/இனிப்பு உள்ளதாகவும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் காலை உணவில் முன்கூட்டியே ஊறவைத்த விதைகளை சேர்க்கலாம் (முன் ஊறவைப்பது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வீக்கத்தைத் தடுக்கிறது).
நீங்கள் பழங்களுடன் நட்ஸ் சாப்பிடலாம், நட்ஸ் மற்றும் உலர் பழங்களையும் இரவு முழுவதும் அல்லது குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன் ஊறவைக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“