இந்தியாவின் ஹெல்மெட் மனிதர் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?
Advertisment
மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்களுக்கு இலவச ஹெல்மெட்களை வழங்குவதன் மூலம் அவர்களின் உயிரை பாதுகாக்கும் பணியில் ராகவேந்திர குமார் ஈடுபட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு இவரது நெருங்கிய நண்பரான கிஷன் குமார் தாகூர் நெடுஞ்சாலை விபத்தில் பலியானார். அவரது மரணம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து தான் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை இவர் தொடங்கினார்.
இது தொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளிவந்த வீடியோ
Advertisment
Advertisements
“அவர் சிறுவயதிலிருந்தே எனது நண்பர். என்னுடன் தான் அறையை பகிர்ந்து கொண்டிருந்தார். அவரது பெற்றோர் அவருக்கான பள்ளி மற்றும் கல்விக்கான கட்டணம் என அனைத்தையும் கொடுத்தனர். ஆனால் ஹெல்மெட் கொடுக்க வேண்டும் என்கிற முக்கியத்துவத்தை அவர்கள் உணரவில்லை. இதனால் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டது. அப்போது தான் நான் இதை எதிர்த்து போராடுவது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.
இனி இந்தியாவின் சாலைகளில் எனது நண்பனை போல யாரையும் இறக்க விடமாட்டேன் என உறுதி எடுத்துக் கொண்டேன்” என்கிறார் சமூக ஆர்வலர் ராகவேந்திர குமார்…
இதற்காக குமார் தனது வேலையை ராஜினாமா செய்ததோடு, விழிப்புணர்வு சேவையை தொடர்வதற்காக தனது குடியிருப்பையும் விற்றுவிட்டார். இதுவரை இந்தியா முழுவதும் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெல்மெட்களை வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக விநியோகித்துள்ளார்…
குமார், தனது காரில் ஹெல்மெட்டுகளை வைத்துக் கொண்டு பரபரப்பான சாலைகளில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்
ராகவேந்திரா குமார் மேலும் கூறுகையில், ‘இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இதை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனது நண்பரை இழந்ததால், ஒவ்வொரு இந்திய குடிமகனையும் எனது நண்பனாக்கி சாலை விபத்துகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பதை எனது வாழ்க்கையின் குறிக்கோளாக மாறியது.
கடந்த 9 வருடங்களில் நான் 22 இந்திய மாநிலங்களில் பயணம் செய்து 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெல்மெட்களை விநியோகித்துள்ளேன், என்றார்..
குமார், தனது காரில் ஹெல்மெட்டுகளை வைத்துக் கொண்டு பரபரப்பான சாலைகளில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். அப்போது பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசத்தை இலவசமாக வழங்குகிறார்..
யாருக்காவது ஹெல்மேட் தேவைப்படுவதை கண்டால் எனது காரில் இருந்து ஹெல்மெட்களை எடுத்து அவர்களுக்கு கொடுப்பேன்
”எத்தனையோ பேர் சாலை விபத்துகளில் இறக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு யாரும் உதவ முன்வருவதில்லை. யாருக்காவது ஹெல்மேட் தேவைப்படுவதை கண்டால் யாரும் சாலை விபத்தில் உயிரிழந்து விடக்கூடாது என்பதற்காக எனது காரில் இருந்து ஹெல்மெட்களை எடுத்து அவர்களுக்கு கொடுப்பேன்…
அந்த நபரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப முடிந்தால் அதுவே என் வாழ்க்கையின் வெற்றியாக கருதுகிறேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்…
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil