விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். மேலும் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார்.
ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இதில் ஜீவாவின் மனைவியாக மீனாவாக, ஹேமா நடிக்கிறார். ஹேமா, Hema’s diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் சமீபத்தில் ஹேமா பகிர்ந்த ஹோம் டூர் வீடியோ இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த வீடியோ ரொம்ப ஸ்பெஷல், ஏன்னா நம்மக்கூட ஒரு புது வரவு சேரப்போகுது. நம்ம கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுல சொந்த வீடு கட்டணும் ஆசை இருக்கும். அதுவும் சென்னையில ஒரு சொந்த வீடு கட்டணும் நினைக்கிறது நிறைய பேரோட கனவு. இந்த கனவு இப்போது எங்களுக்கு நிஜமாயிருக்கு. ஒரு வருஷமா நம்ம சொந்த வீட்டோட கட்டுமான வேலை போயிட்டு இருக்கு. கிட்டத்தட்ட 70 சதவீதம் கட்டுமானம் முடிஞ்சிருச்சி. இந்த நல்ல விஷயத்தை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கத்தான் இந்த வீடியோ என்று சொல்லி வீடு இருக்கும் இடத்துக்கு ஹேமா போகிறார்.
உள்ளே போனதும் வீட்டின் மெயின் வாசல், சிட் அவுட் ஏரியா, ஃபிரெஞ்ச் ஜன்னல் என எல்லாமே காட்டுகிறார். உள்ளே போனதும் பெரிய ஹால். டுயூபிளக்ஸ் வீடு கட்டணும் ரொம்ப ஆசை.. டுயூபிளக்ஸ் வீடுன்னா வீட்டுக்குள்ளே படிக்கட்டு இருக்கும். இப்போ நாம அதான் கட்டிருக்கோம்.
ஹால்ல இருந்து இடது பக்கம் கிச்சன் இருக்கு. ஹால்ல நுழைஞ்ச உடனே இடது பக்கம் கிச்சம் இருந்தா வீட்டுக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லுவாங்க. இது குட்டி கிச்சன் தான். இதுல முழுக்க கடப்பா கல், மேலே கபோர்ட்ஸ் அடிச்சு மாடுலர் கிச்சன் பண்ண போறோம்.
இப்போவரைக்கும் இருந்த எந்த வீட்டுலயும் தனியா பூஜை அறை கிடையாது. இப்போ இருக்க வாடகை வீட்டுல கூட கிச்சன்ல ஒரு சின்ன போர்ஷனை பூஜை ரூமா வச்சுருக்கோம். நம்ம சொந்தமா ஒரு வீடு கட்டும்போது, பூஜை ரூமுக்குனு தனியா ஒரு இடம் ஒதுக்கணும் எனக்கு ரொம்ப ஆசை இருந்தது. அதான் இது என பூஜை ரூமை காட்டுகிறார் ஹேமா..
அடுத்து அம்மா, அப்பாவுக்கு பெட்ரூம். அட்டாச்டு பாத்ரூம் இருக்குனு அப்படியே படி ஏறி மேலே உள்ள போர்ஷனுக்கு போகிறார். மேலே ரெண்டு ரூம் இருக்குது. ஒரு சிட் அவுட் ஏரியாவும் இருக்குது.
இதுதான் எங்க மாஸ்டர் பெட்ரூம், இங்க எங்களுக்கு நிறைய பிளான் இருக்கு. இங்க பெட், டிவி, வார்டிரோப், டிரெஸ்ஸிங் டேபிள் வரும். அட்டாச்டு பாத்ரூம் இருக்கு. இந்த ரூம்ல பால்கனி கூட இருக்கு. அப்புறம் கெஸ்ட் ரூம், இதுக்கு மேல மொட்டை மாடி. இங்கயும் ஒரு சிட் அவுட் இருக்குது. வீட்டோட மொத்த ஏரியா 1356 சதுர அடி.
இதுதான் நம்மளோட கனவு வீடு. எல்லாருக்குமே சொந்த வீடு கட்டணும் ஆசை இருக்கும். அந்த ஆசை இவ்ளோ வருஷம் கழிச்சு இப்போதான் நிறைவேறியிருக்கு. இந்த வேலை எல்லாம் முடிஞ்சி, வீடு ரெடி ஆன பிறகு கிரகப்பிரவேசம் அப்போ உங்களுக்கு ஒரு வீடியோ போடுறேன் என முடிக்கிறார் ஹேமா…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.