Advertisment

'கை காமிச்சாலே லைட் ஆன் ஆகும்': பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா புதிய வீடு பிரம்மாண்டம்

ஸ்ட்ரிப்ஸ் லைட், குட்டி லைட், சாண்ட்லியர் லைட் எல்லாம் ஒவ்வொரு கடையும் ஏறி இறங்கி பாத்து பாத்து வாங்குனோம்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hema Rajkumar

Hema Rajkumar

விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.

Advertisment

ஹேமா Hema’s  diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் ஹேமா தன் புது வீட்டின் வீடியோவை பகிர்ந்திருந்தார்.

ஒரு குட் நியூஸ் உங்ககிட்ட சொல்லணும், நம்ம வீட்டோட கிரகப் பிரவேசம் ரொம்ப சிம்பிளா முடிச்சுட்டோம். பெருசா யார்கிட்டயும் சொல்லல. இன்னும் அந்த வீட்டுக்கு நம்ம ஷிஃப்டு ஆகல. அங்க கொஞ்சம் வேலைகள் நடந்துட்டு இருக்கு. அது எல்லாமே முடிச்சுட்டு அங்க போகலாம்னு  இருக்கோம்.

வீடு  கட்டுனுது, ஃபால் சீலிங் வேலை எல்லாம் நீங்க பாத்துருப்பீங்க… லைட்ஸ் வாங்கிறதுதான் ரொம்ப பெரிய வேலையா இருந்தது. அந்த லைட்ஸ் எல்லாம் போட்டதுக்கு அப்புறம் வீடு இப்போ பாக்கிறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு.

publive-image

வீட்டை சுத்தி காம்பவுண்ட்ல ஒவ்வொரு இடத்துலயும் லைட் வைக்கணும் எனக்கு ஆசை. நைட் லைட் போடும்போது சூப்பரா இருக்கும். காம்பவுண்ட் சுத்தி லைட் இருக்கும். இது நம்ம படுக்கிற வரைக்கும் எரியும்.

பொதுவா வீடு கட்டும் போது லைட்ஸ் பாத்து வாங்கிறதுதான் பெரிய விஷயம். ஃபால் சீலிங்கல நிறைய லைட் இருக்கு.

publive-image

ஸ்ட்ரிப்ஸ் லைட், குட்டி லைட், சாண்ட்லியர் லைட் எல்லாம் ஒவ்வொரு கடையும் ஏறி இறங்கி பாத்து பாத்து வாங்குனோம். இது எல்லாம் ஃபால் சீலிங்காக போட்டது, இது இல்லாம ரெண்டு ட்யூப் லைட் இருக்கு.

publive-image

கிச்சன்ல பவர் லைட், ட்யூப் லைட் இருக்கு. இது இல்லாம சிம்னிக்கு அடியிலயும் ஒரு லைட் இருக்கு.

publive-image

படுக்கயறை லைட்

publive-image

மாஸ்டர் பெட்ரூம் லைட்

publive-image

நம்ம வீட்டுக்கு ரெண்டு சாண்ட்லியர் லைட் போட்டிருக்கோம். இது இன்னொரு லைட். கிரவுண்ட் ஃபுளோர்ல இருந்து பாக்கும் போது இதோட வியூ நல்லா இருக்கும்.. இப்படிபல விஷயங்களை ஹேமா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment