Advertisment

2 அடுக்கு மாடி; பிரம்மாண்ட பெட் ரூம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா புதிய வீடு வீடியோ

இப்போது வீட்டின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், மீண்டும் ஹேமா அதை ஒரு வீடியோவாக எடுத்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Hema Rajkumar

விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.

Advertisment

ஹேமா Hema’s  diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் ஹேமா அவர் கட்டும் புது வீட்டின் வீடியோவை பகிர்ந்திருந்தார். அப்போது அந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தது.

சென்னையில ஒரு சொந்த வீடு கட்டணும் நினைக்கிறது நிறைய பேரோட கனவு. இந்த கனவு இப்போது எங்களுக்கு நிஜமாயிருக்கு. ஒரு வருஷமா நம்ம சொந்த வீட்டோட கட்டுமான வேலை போயிட்டு இருக்கு.

உள்ளே போனதும் வீட்டின் மெயின் வாசல், சிட் அவுட் ஏரியா, ஃபிரெஞ்ச் ஜன்னல் என எல்லாமே காட்டுகிறார். உள்ளே போனதும் பெரிய ஹால்.  டுயூபிளக்ஸ் வீடு கட்டணும் ரொம்ப ஆசை.. டுயூபிளக்ஸ் வீடுன்னா வீட்டுக்குள்ளே படிக்கட்டு இருக்கும். இப்போ நாம அதான் கட்டிருக்கோம். ஹால்ல இருந்து இடது பக்கம் கிச்சன் இருக்கு என ஹேமா கிரவுண்ட் ஃபுளோர், மேல் போர்ஷன், பால்கனி, மொட்டை மாடி என எல்லாவற்றையும் சுற்றி காண்பித்தார்.

இந்நிலையில் இப்போது வீட்டின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், மீண்டும் ஹேமா அதை ஒரு வீடியோவாக எடுத்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் நான் வீட்டுக்கு வரேன். நம்ம வீட்டுல இப்போ 95 சதவீத வேலைகள் முடிஞ்சிருக்கு. சின்ன சின்ன வேலைதான் இருக்கு. ஃபிரென்ஞ் ஜன்னல், ஃபால்ஸ் சீலிங் வேலை எல்லாம் முடிஞ்சிருக்கு. கிச்சனும் கபோர்ட்ஸ் எல்லாம் வச்சு ஃபுல்லா ரெடி ஆயிடுச்சு.

publive-image

வீட்டின் கிச்சன் பகுதி

ஒவ்வொரு ரூம் கட்டிட்டு இருக்கும் போது பாக்கும் போது சின்னதா இருந்தது, ஆனா இப்போ கொஞ்சம் பெருசாவே இருக்கு. அங்கங்க சின்ன வேலை இருக்கு. அதெல்லாம் முடிச்சி பெயிண்ட் பண்ணிட்டா வீடு முழுசா ரெடி ஆயிடும். இன்னும் அடுத்த வீடியோவுல கிரஹ பிரவேசத்துக்கு முன்னாடி வீடு எல்லாம் பெயிண்ட் பண்ணிட்டு ரெடி பண்ற வீடியோவாதான் இருக்கும் என்று முடிக்கிறார் ஹேமா…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment