scorecardresearch

பயோமெட்ரிக் லாக் ஃபால்ஸ் சீலிங், கிரானைட் ஃபினிஷிங்; ஹேமா வைரல் வீடியோ

இன்னும் நம்ம வீட்டுக்கு என்னென்ன மாதிரியான வேலைகள் பண்ணலாம், இண்டிரியர் டிசைன் வைக்கலாம்னு நான் நிறைய வீட்டுக்கு போயி பாத்துட்டு இருக்கேன்- ஹேமா

பயோமெட்ரிக் லாக் ஃபால்ஸ் சீலிங், கிரானைட் ஃபினிஷிங்; ஹேமா வைரல் வீடியோ
Hema Rajkumar

விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.

ஹேமா Hema’s  diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் சமீபத்தில் ஹேமா பகிர்ந்த ஒரு வீடியோ இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

நம்ம புதுசா வீடு கட்டிட்டு இருக்கோம் எல்லாருக்கும் தெரியும், அதனால இன்னும் நம்ம வீட்டுக்கு என்னென்ன மாதிரியான வேலைகள் பண்ணலாம், இண்டிரியர் டிசைன் வைக்கலாம்னு நான் நிறைய வீட்டுக்கு போயி பாத்துட்டு இருக்கேன். இப்போ நான் மேடவாக்கம் பக்கத்துல பொன்மார் ஏரியால ஒரு பில்டர்ஸ் ஓட வில்லாவ தான் பாக்க வந்துருக்கேன்.

வாங்க உள்ள போயி எப்படி இருக்கு பாக்கலாம்னு வீட்டுக்குள் போகிறார் ஹேமா.

பில்லர்ஸ் உடன் மொட்டை மாடி

உள்ளே போனதும் எண்ட்ரன்சில் போர்டிகா, தரை, சுவர்களில் டைல்ஸ், ஸ்லைடிங் கேட், கதவில் பயோமெட்ரிக் லாக் என முழு அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் வீடு இருக்கிறது.  வீட்டுக்குள் போனதும் ஃபால்ஸ் சீலிங் வேலைப்பாடுகளுடன் கூடிய மெயின் ஹால், ஸ்டைட் விண்டோஸ், ஷோ கேஸ், டிவி யூனிட் என அழகாக இருக்கிறது. ஹாலுக்கு அடுத்து மாடூலர் கிச்சன் இருக்கிறது. இங்கு சிங்க், கேஸ் வைக்கிறதுக்கான போர்ஷன், பாத்திரங்கள் வைப்பதற்கான ஸ்டோரேஜ் என முழு வசதிகளுடன், கிரானைட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

அடுத்து வார்டிரோப், வால் ஃபினிஷிங், அட்டாச்டு பாத்ரூம் உடன் கூடிய ஒரு சிறிய பெட்ரூம் இருக்கிறது என்ற ஹேமா இது டியூபிளக்ஸ் வீடு, வீட்டுக்குள்ளேயே படிக்கட்டு இருக்கும் என்று சொல்லி மேல் போர்ஷனுக்கு செல்கிறார். அங்கு, ஃபால்ஸ் சீலிங், ஜன்னல், டிவி யூனிட், வால் ஃபினிஷிங் உடன் கூடிய மினி ஹால் இருக்கிறது.

மேலேயும் வார்டிரோப், அட்டாச்டு பாத்ரூம் உடன் இரண்டு பெட்ரூம், அதில் ஒரு பெட்ரூமில் கிளாஸ் ஃபினிஷிங் உடன் பால்கனி இருக்கிறது.

இதுக்கு மேல மொட்டை மாடி இருக்கு, இந்த வீட்டுல எல்லா ரூம்லயும் லைட் போடலனா கூட, நேச்சுரல் லைட் உள்ள வர மாதிரி கட்டிருக்காங்க என இப்படி பல விஷயங்களை ஹேமா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவ பாருங்க!

இதுதான் நாங்க கட்டும் புது வீடு.. ஹேமா வீடியோ

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Hema rajkumar viral youtube video pandian stores serial vijay tv

Best of Express