/tamil-ie/media/media_files/uploads/2017/08/almonds_759_thinkstockphotos-151017269.jpg)
Bowl full of almonds
பாதாம் பருப்பை தினந்தோறும் உட்கொண்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தீய கொழுப்புகளை கரைத்து,
இதய ஆரோக்கியத்திற்கு 19 சதவீதம் வழிவகுக்கும் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்புகளை உற்பத்தி செய்யும் என அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. மேலும், பாதாம் பருப்பில் தீய கொழுப்புகள் இல்லை எனவும் அந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. அதனால், தினந்தோறும் கைப்பிடி அளவு பாதாம் பருப்பை உட்கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
(Nutrition) நியூட்ரிஷன் எனும் இதழில் சமீபத்தில் வெளியான இதழில் இந்த ஆராய்ச்சி இடம்பெற்றுள்ளது. நல்ல கொழுப்புகளில் உள்ள ரத்தத்தின் அளவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கல்லீரலுக்கு கடத்தக்கூடிய தீய ரத்த கொழுப்பையும் அதிகரிக்கிறது என அந்த ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வுக்காக அதிக தீய கொழுப்புகளையுடைய நபர்களை இரு குழுக்களாக பிரித்தனர். ஒரு குழுவில் உள்ளவர்கள் தினமும் 43 கிராம் பாதாம் பருப்புகளை உண்டனர். 10 எண்கள் கொண்ட பாதாம் பருப்புகள் 100 கலோரிகளை உள்ளடக்கியது. மற்றொரு குழுவினர் வாழைப்பழ மஃபின் எனப்படும் இனிப்பு வகையை உண்டனர்.
இந்த ஆய்வின் முடிவில் இரு குழுவில் உள்ளவர்களது நல்ல கொழுப்புகளின் அளவுகளும் கணக்கிடப்பட்டது.
அதில், தினமும் பாதாம் பருப்புகளை உண்டவர்களின் உடலில் 19 சதவீதம் நல்ல கொழுப்புகள் அளவு அதிகரித்தது தெரியவந்தது.
பாதாம் பருப்பு உண்டால் கொழுப்பு உருவாகி உடல் பருமனாகிவிடும் என்ற பயமில்லை. பாதாம் பருப்புகளை குறிப்பிட்ட அளவு தினமும் உட்கொண்டால் உடலுக்கு நல்லது விளைவிக்கக்கூடிய கொழுப்புகளை உருவாக்கி, இதயத்தின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும் என்பது, பாதாம் பிரியர்களுக்கு நிச்சயம் நற்செய்திதான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.