History of Chennai Sowkarpet Mint Street Photo Gallery : வட சென்னையின் கலாச்சார மையமாக, பன்முகத் தன்மை கொண்ட பகுதியாக இருக்கிறது மிண்ட் தெரு. வால்டாக்ஸ் ரோட்டில் இருந்து சென்னை மத்திய ரயில் நிலையம் வரையிலான 4 கி.மீ தெருவில் என்ன தான் இருக்கிறது என்பதை புகைப்படங்களின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்!
Advertisment
சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...
சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து இரண்டாவது இடது புறமாக செல்லும் போது நம்மை வரவேற்கும் நம்ம சென்னை! (Express Photo by Nithya Pandian)
வியாபாரம் துவங்குவதற்கு முன்பு கூட்டம் குழப்பம் இல்லாமல் அமைதியாக இருக்கும் தெரு (Express Photo by Nithya Pandian)
குறுகலான தெருக்களைக் கொண்டிருக்கும் இந்த பகுதியில் சில வீடுகள் அப்படியே பயன்படுத்தாமல் கைவிடப்பட்டிருக்கிறது.
குறுகலான தெருக்களைக் கொண்ட மிண்ட் தெரு (Express Photo by Nithya Pandian)
பல்வேறு தரப்பட்ட மக்கள் வாழ்வதால் அவர்களின் கலாச்சாரம் மற்றும் கலை வெளிப்பாடும் அவர்கள் வாழும் வீடுகளின் வடிவங்களை கொண்டு கண்டறியலாம். (Express Photo by Nithya Pandian)
பல்வேறு தொழில்களை செய்யும் மக்கள்
சென்னையில் அரிதாகவே காணப்படும் மனிதர்களால் இழுக்கப்படும் ரிக்ஷா (Express photo by Nithya Pandian)
ரிக்ஷா வண்டி ஓட்டும் சௌகார்பேட்டைவாசி (Express photo by Nithya Pandian)
தானியங்களில் கல் நீக்கும் பாட்டி (Express photo by Nithya Pandian)
சௌகார்பேட்டையில் குஜராத்திகள், ராஜஸ்தானிகள், தெலுங்கு மக்கள், தமிழ் மக்கள் என பல மொழி பேசும் இந்திய மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை செய்கின்றனர்.
சென்னையில் இருக்கும் பல்வேறு கடைகளுக்கும் மளிகைப் பொருட்கள் இங்கிருந்து தான் அனுப்பி வைக்கப்படுகிறது. மூட்டை இழுப்பதற்காக பயன்படுத்தும் வண்டி (Express photo by Nithya Pandian)
ஆரம்ப காலம் தொட்டே தங்கம் மற்றும் வெள்ளியை உருக்கி நாணயங்கள் செய்வதில் பெயர் பெற்றது இந்த தெரு. அதன் அடையாளம் இன்று இல்லை. இருப்பினும் இது போன்று உருட்டாலைகளை காண முடிகின்றது. (Express Photo by Nithya Pandian)
உண்டியல் உருவாக்கும் தொழிலை செய்யும் நபர் (Express photo by Nithya Pandian)
உண்டியல் உருவாக்கும் தொழிலை செய்யும் நபர் (Express photo by Nithya Pandian)
சௌக்கார்பேட்டை என்றாலே ஜொலிக்கும் உடைகளும், நகைகளும் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அதில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை. சென்னை சௌக்கார்பேட்டை தங்கசாலை தெருவில் அமைந்திருக்கும் துணிக்கடைகள்.
ராஜ் மந்திர் துணிக்கடை (Express photo by Nithya Pandian)
ஸ்ரீ ஜீ ஃபேஷன் துணிக்கடை (Express photo by Nithya Pandian)
தையற் கலைஞர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் கடை (Express Photo by Nithya Pandian)
மிகவும் குறைவான விலையில் அனைத்து பொருட்களும் இந்த கடையில் கிடைப்பதால் இங்கு மக்கள் கூட்டம் குறையாமல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. (Express Photo by Nithya Pandian)
துணிக்கடைகளுக்கும் நகைக்கடைகளுக்கும் மட்டுமே பெயர் பெற்றதல்ல சௌகார்பேட்டை. வட இந்திய இனிப்பு உணவுகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் இடமாக இருக்கிறது இந்த பகுதி.
மோர்கடை நடத்தும் தினேஷ் அனிமோல் சோனி (Express photo by Nithya Pandian)
காக்டா ராம்பிரசாத் கடையில் தயாராகும் இனிப்பு (Express photo by Nithya Pandian)
இங்கு கிடைக்கும் ”சாட்” உணவுகளை ருசிப்பதற்காகவே மக்கள் சௌக்கார்பேட்டையை படை எடுத்து வருகின்றனர். (Express Photo by Nithya Pandian)
மதங்களும் கோவில்களும்
இந்த பகுதியில் தமிழ் இந்துக்கள், மார்வாரி இந்துக்கள், குஜராத் சமணர்கள் என பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். எனவே நீங்கள் இங்கு நிறைய கோவில்கள் இருப்பது ஆச்சரியம் அளிக்கும் ஒன்றில்லை.
530 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பைராகி மடம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் வெளிக்கோபுரம் மற்றும் உட்கோபுரம்.
பைராகி மடம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உட்புறம் (Express Photo by Nithya Pandian)
பைராகி மடம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் வெளிப்புறத்தோற்றம் (Express Photo by Nithya Pandian)
இங்கு இருக்கும் பல்வேறு இந்துக் கோவில்கள் முறையான பாதுகாப்பும், பராமரிப்பும் இன்றி கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் அழகியலை இழந்து வருகிறது. (Express Photo by Nithya Pandian)
சமணர் கோவில்கள்
இந்த பகுதியில் நிறைய குஜராத்தி ஜெய்ன்களின் வழிப்பாட்டுத் தலங்கள் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் பூஜை செய்வதற்காக விதிமுறைகள் பலவும் பின்பற்றப்பட்டு வருகிறது.
தங்கசாலைத் தெருவில் அமைந்திருக்கும் சமணர் கோவிலின் வெளிப்புறம் (Express Photo by Nithya Pandian)
பெண் சமணத்துறவிகள் (Express Photo by Nithya Pandian)
ராஜஸ்தான் இந்து கோவில்கள்
தமிழ் இந்து கோவில்கள் போல் இல்லாமல் மற்றொரு வகையான கட்டமைப்பைக் கொண்டுள்ளது மார்வாரி இந்து கோவில்கள். மார்பிள் கற்களால் ஆன இந்த கோவில்களைக் கட்ட ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சொம்புரா பிராமணர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.
ஆய்மாதாஜி கோவில் சந்நிதி (Express Photo by Nithya Pandian)
சொம்புரா கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக் காட்டு (Express Photo by Nithya Pandian)
சொம்புரா கட்டிடக் கலைக்கு மேலும் எடுத்துக்காட்டு (Express Photo by Nithya Pandian)
ஆய்மாதாஜி கோவிலில் அமர்ந்திருக்கும் மார்வாரி இந்துக்கள் (Express Photo by Nithya Pandian)
கோவில்கள் மட்டுமின்றி மடங்களாலும், பஜனைக்கூடங்களாலும் நிரம்பி வழிந்த தங்கசாலை தெரு ஒரு காலத்தில் கர்னாடிக் சங்கீதம் மலர காரணமாக அமைந்திருந்தது. இன்று பஜனைக் கூடங்கள் ஏதும் இல்லை. இது ஒன்று மட்டும் தான் கண்ணில்பட்டது.
நாணயங்கள் தயாரிப்பு மட்டுமின்றி அச்சக தொழில்களும் இங்கு வளம் பெற துவங்கியது. தி இந்து, விகடன் போன்ற பத்திரிக்கைகள் தங்களின் பயணத்தை இங்கு தான் துவங்கியது.
நூறாண்டுகள் பழமை வாய்ந்த சாஸ்திர சஞ்சீவிநி அச்சுக்கூடம் (Express Photo by Nithya Pandian)
சென்னை வரலாற்றினை எடுத்துப்பார்த்தால் கறுப்பர்கள் நகரம் என்று அழைக்கப்பட்ட ஜார்ஜ் டவுன் இன்றி வரலாறு முழுமை அடையாது. அதன் ஒரு பகுதியாக இருக்கும் சௌக்கார்பேட்டையின் சாலைகள் எல்லாம் நாம் கடந்து வந்த 300 ஆண்டு கால சென்னையின் வரலாற்றினை தன்னுள் கொண்டிருக்கிறது. சௌகார்பேட்டை குறித்த முழுமையான வரலாற்றினைப் படிக்க
தங்கசாலையின் மற்றொரு எல்லை (Express Photo by Nithya Pandian)