மோசமான தூக்கம், பரம்பரை, வயது, மன அல்லது உடல் அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உணவுக் குறைபாடுகள் ஆகியவை கருவளையங்களை ஏற்படுத்தும்.
உண்மையில், கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது, பொதுவாக வயதான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் முதல் இடம் இதுவாகும். எனவே ஒரு சீரான உணவை உட்கொள்வதோடு கூடுதலாக சில வீட்டு வைத்தியங்களும், அவற்றின் தோற்றத்தைத் தடுக்க அல்லது குறைக்க உதவும்.
நீங்கள் கருவளையங்கள் மற்றும் வீங்கிய கண்களுக்கு சிகிச்சையளிக்க ஒன்றை தேடுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான சரியான தீர்வு இங்கு உள்ளது.
தோல் மருத்துவர் கீதிகா மிட்டல் குப்தா, கருவளையங்கள் மறைய நீங்களே வீட்டில் சொந்தமாக செய்யக்கூடிய எளிய மாஸ்க் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மஞ்சள் ஐ மாஸ்க்
ஒரு கிண்ணத்தில் தலா 1 டீஸ்பூன் மஞ்சள் மற்றும் மோர் சேர்த்து நன்கு கலக்கவும். உங்கள் கண்களுக்குக் கீழே தடவி 15 நிமிடங்கள் வைக்கவும். ஈரமான காட்டன் துணி மூலம் சுத்தம் செய்யவும்.
கண்களுக்குக் கீழே சில மஞ்சள் எச்சங்களைக் கண்டால், நிறம் மறையும் வரை உங்கள் வழக்கமான ஃபேஸ் வாஷ் மூலம் முகத்தை கழுவவும்.
இது எப்படி வேலை செய்கிறது?

இந்த ஐ மாஸ்க் கருவளையங்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கிய கீதிகா, மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கருவளையங்களை குறைக்க உதவும் என்றார்.
மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது பிக்மென்டேஷனுக்கு சிறந்தது மற்றும் புற ஊதா கதிர்களுக்கு எதிராக பாதுகாப்பை உறுதி செய்கிறது. மறுபுறம், “மோர் ஒரு லேசான எக்ஸ்ஃபோலியேட்டர் ஆகும், இது லாக்டிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது, புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தை அளிக்கிறது.
நிபுணர் ஒரு உதவிக்குறிப்பையும் பகிர்ந்துள்ளார்: காட்டன் பஞ்சு எடுத்து, அதை ரோஸ் வாட்டரில் நனைத்து 15 நிமிடம் கண்களில் வைத்தால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும். நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்த டீ பேக்ஸ் பயன்படுத்தலாம், வீக்கத்தைக் குறைக்க அவற்றை உங்கள் கண்களில் 15 நிமிடங்கள் வைக்கலாம், என்று கீதிகா மேலும் கூறினார்.
உங்கள் தோலில் ஒரு புதிய ஃபார்முலாவை பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள், என்று அவர் வலியுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“