Advertisment

வறண்ட சருமத்துக்கு மஞ்சள்: ஆயுர்வேத நிபுணர் பரிந்துரைத்த ஃபேஷியல் மாஸ்க்

ஆயுர்வேத நிபுணர் நித்திகா கோஹ்லி தனது இன்ஸ்டாகிராமில், சில எளிதான ஃபேஸ் பேக் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Expert suggested facial mask

நாம் அனைவரும் குறைபாடற்ற மற்றும் பொலிவான சருமத்தைப் பெற விரும்புகிறோம், ஆனால் நேரமின்மை மற்றும் சரியான கவனி ப்பு இல்லாததால் நமது சருமம் மந்தமாகவும், வறண்டதாகவும் இருக்கும். இது மட்டுமின்றி, சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் வானிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Advertisment

கொளுத்தும் கோடைக்காலம் மற்றும் அது கொண்டு வரும் ஈரப்பதம் நிச்சயமாக நம் சருமத்திற்கு நல்லதல்ல. வானிலை, முகப்பரு உட்பட பல தோல் பிரச்சனைகளை தூண்டுகிறது.

ஆயுர்வேத நிபுணர் நித்திகா கோஹ்லி தனது இன்ஸ்டாகிராமில், நீங்களே வீட்டில் செய்யக்கூடிய, சில எளிதான ஃபேஸ் பேக் பகிர்ந்துள்ளார்.

வறண்ட சருமத்திற்கு

publive-image

வறண்ட சருமத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஃபேஷியல் உங்கள் முகத்திற்கு ஆரோக்கியமான பொலிவைத் தரும்.

கடலை மாவு, மஞ்சள்தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேக்கை உங்கள் முகத்தில் 15-20 நிமிடங்கள் தடவி, பின்னர் கழுவவும்.

முகப்பரு உள்ள சருமத்திற்கு

அரைத்த வேம்பு, முல்தானி மட்டி, சந்தனப் பொடி, லோத்ரா பொடி ஆகியவற்றைக் கொண்டு கெட்டியான பேஸ்ட்டைத் தயாரித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். உலர வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

இதை தினமும் செய்து, பளபளப்பான சருமத்தைப் பெறுங்கள்.

சிறிதளவு கவனிப்பு உங்கள் சருமத்தை புத்துயிர் பெறச் செய்யும், துளைகளை அவிழ்த்து, அதன் இழந்த பளபளப்பையும் பிரகாசத்தையும் திரும்பக் கொடுக்கும், என்று டாக்டர் நித்திகா தனது பதிவில் எழுதியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment