தூத்துக்குடியில் திருநங்கையை திருமணம் செய்துக் கொண்ட பட்டதாரி இளைஞனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தூத்துக்குடியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் அருண் குமார், ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா என்ற திருநங்கையை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஸ்ரீஜா தூத்துக்குடியில் உள்ள னியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.
இந்நிலையில், இவரின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. அருண் குமாரின் வீட்டில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. எனவே, பெற்றோரை எதிர்த்தம் அருண் குமார் ஸ்ரீஜாவை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
ஆனால், இதற்கு அடுத்தப்படியாக வந்த எதிர்ப்பு கோவில் ஊழியர்கர்களிடம் இருந்து. திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்த அருண் - ஸ்ரீஜா இவருவரும் மணக்கோலத்தில் தூத்துக்குடியில் உள்ல சிவன் கோயில் ஒன்றிற்கு சென்றனர்.
ஆனால், இந்த திருமணத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று கோவில் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர். இந்து திருமண சட்டப்படி ஒரு ஆண், பெண்ணைத்தான் திருமணம் செய்ய முடியும் என்றும் திருநங்கையை திருமணம் செய்ய முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறினர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/11/h7.jpg)
இதனால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஸ்ரீஜாவின் நண்பர்களான திருநங்கைகள் சிலர் கோயில் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்து உள்ளதாகவும், எனவே சட்டப்படி இந்த திருமணத்தை நடத்தலாம் என்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட திருநங்கைகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அதிகாரிகளிடம் பேசி முதலில் திருமணத்தை நடத்திடலாம், பின்னர் சான்றிதழ் விவகாரத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று சமானப்படுத்தினர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/11/h7-1.jpg)
இதனை ஏற்றுக் கொண்ட மணமக்கள் கோயிலில் நண்பர்கள் முன்னிலை திருமணம் செய்துக் கொண்டனர். இதுக் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய மணமகன் அருண், “ காதலுக்கு திருநங்கை,அழகு,வசதி இவை ஏதும் தெரியாது. அதே நேரத்தில் ஸ்ரீஜா மீது பரிதாபப்பட்டோ நான் இந்த திருமணத்தை செய்துக் கொள்ளவில்லை.இது எங்கள் காதலின் வெற்றி” என்று கூறியுள்ளார்.
இந்த திருமணம் குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..மேலும், பட்டத்தாரி இளைஞர் அருணுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.