சிறிதாக வானிலை மாறினாலோ அல்லது தொண்டை வலி ஏற்பட்டால், நாம் சூடான உப்பு தண்ணீரில் கார்கில் செய்வது, வழக்கமாக கொண்டுள்ளோம். நமக்கு அதிகமாக தொண்டை வலி ஏற்படும்போது, சைனஸ், சளி தொல்லை ஏற்படும் போது, நாம் உப்பு சேர்த்து சூடான நீரில் கார்கில் செய்தால் வலி மற்றும் வீக்கம் நீங்கும்.
உப்பு கலந்த தண்ணீர், நமது தொண்டையில் உள்ள பாக்ட்டீரியா, வைரஸ் அதிகமாக வளராமல் இருக்க உதவுகிறது. இதனால் வலி மற்றும் தொண்டை விக்கம் குணமாகும். நமது தொண்டையில் உள்ள வீக்கமான சதை பகுதியில் உள்ள அதிக திரவத்தை இது நீக்கும். இதனால் வலி நீங்கும், குணமாக உதவும்.
அறிவியல் முறைப்படி உப்பிற்கு நமது வாய் சமந்தமான சதைகளில் உள்ள தண்ணீரை எடுத்துகொள்ளும். இதனால் உடல் பாதிக்கும் பேக்டீரியா, வைரஸ் நமது வாய் மற்றும் தொண்டையை பாதிக்காது. உப்பில் உள்ள ஆன்டிசெப்டிக் தன்மை, கிருமிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றுகிறது.
தொண்டை வலி, ப்ளூ காய்ச்சல், சைனஸ், பற்கள் பிரச்சனை, வாய் புண்கள் ஆகியவற்றுக்கு நாம் கார்கில் செய்யலாம். இதனால் காய்ச்சல், சளி ஆகியவற்றில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது. ¼ முதல் 1/ 2 டீஸ்பூன் உப்பை, 250 எம். எல் சூடான தண்ணீர் சேர்த்து 2 முறை ஒரு நாளைக்கு கார்கில் செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“