Advertisment

இந்தியா கொண்டாடும் உழவர்கள் திருவிழா… மற்ற மாநிலங்களில் எப்படியெல்லாம் கொண்டாடுறாங்க தெரியுமா?

பொங்கல் பண்டிகை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி வெவ்வேறு பெயரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை குறித்து இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

author-image
s.anoj anoj
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியா கொண்டாடும் உழவர்கள் திருவிழா… மற்ற மாநிலங்களில் எப்படியெல்லாம் கொண்டாடுறாங்க தெரியுமா?

பொங்கல் பண்டிகை உழவர்களுக்கான திருநாள். இது, அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது.

Advertisment

மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி, இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாப்படுகிறது.

இந்தியாவைத் தாண்டி இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், லாவோஸ், சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மொரீஷியஸ் போன்ற நாடுகளிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தாய்லாந்து நாட்டில் 'சொங்க்ரான்' என்ற பெயரிலும், லாவோஸில் 'பிம லாவ' என்ற பெயரிலும், மியான்மரில் 'திங்க்யான்' என்ற பெயரிலும், நேபாளத்தில் 'மாகே சங்கராந்தி' என்ற பெயரிலும், இலங்கையில் புத்தாண்டாகவும் இப்பண்டிகையைக் கொண்டாடி அந்தந்த நாடுகளின் மக்கள் மகிழ்கிறார்கள்.

இந்த பொங்கல் பண்டிகை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி வெவ்வேறு பெயரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை குறித்து இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை 4 நாள்கள் வெகு விமரிசையாக கொண்டாப்படும். முதல் நாள் போகி பண்டிகையாகும். இந்நாளில், வீட்டில் உள்ள பழைய பொருள்களை நெருப்பில் போட்டு எரிப்பது வழக்கம்.

இரண்டாம் நாள், பொங்கல் பண்டிகையாகும். இந்நாளில், புத்தாடை அணிந்தும், பானையில் பொங்கல் சமைத்து வழிபடுவார்கள்.

publive-image

மூன்றாம் நாள், மாட்டுப்பொங்கல் ஆகும். இந்நாள், விவசாயத்திற்கு உதவு செய்யும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் கொண்டாடப்படுகிறது. மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி அலங்கரிப்பார்கள். கூடுதலாக, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும் இந்நாளில் தான் நடைபெறும்.

publive-image

நான்காம் நாள் காணும் பொங்கல் ஆகும். இந்நாளில், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். பெரியவர்களிடம் ஆசிப்பெற்றுக்கொள்ளவார்கள். எல்லாவற்றுக்கு மேல், பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால், குட்டீஸ்களுக்கு மகிழ்ச்சியான பண்டிகையாகவும் மாறிவிடுகிறது.

ஆந்திரா, கர்நாடகா

ஆந்திராவில் பொங்கல் பண்டிகை மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பெயரளவில் வித்தியாசம் இருந்தாலும், தமிழ்நாட்டை போலவே பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். நாம் நான்கு நாள்கள் கொண்டாடுகையில், ஆந்திராவில் முதல் நாள் போகி, மறுநாள் மகர சங்ராந்தி மற்றும் மூன்றாவது நாள் கன்னுமா என மூன்று நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள்.

கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். முதல் இருநாள் மட்டும் அரசு விடுமுறை என்றாலும், கிராமங்களில் கன்னுமா மிகவும் விசேஷமான நாளாகும். இந்நாளில் மாடுகளின் ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுக்கள் நடைபெறுவது வழக்கம்.

publive-image

கர்நாடகாவிலும் மகர சங்ராந்தி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் பொங்கல் ஒரேஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது.

அசாம்

அசாம் மாநிலத்தில் அறுவடைத் திருநாளை "போஹாலி பிஹூ" என்ற பெயரில், அசாமிய காலண்டரின் 'மாக்' மாதத்தின் முதல் நாளாக ஜனவரி 15-ல் கொண்டாடுகிறார்கள்.

போஹாலி பிஹூவக்கு முந்தைய நாளில் அஸாமிக்கள் உறவினர்களுடன் ஒரே இடத்தில் கூடி இரவு அசைவ உணவு விருந்தை ருசிப்பார்கள்

இரண்டாவது நாளில், மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு 'மேஜி' என்றழைக்கப்படும் ஒன்றை பிரமிடுகள் வடிவில் செய்வார்கள். இதை அறுவடை செய்த நிலங்களில் அமைத்து பூஜை செய்து நாம் போகியில் எரிப்பதுபோல் எரித்து விடுவார்கள்.

publive-image

அன்றைய தினம், அவலில் தயிர் கலந்து ஒரு உணவுப்பண்டம் மற்றும் எள்ளில் வெல்லம் கலந்து ஒரு இனிப்பு சாப்பிடுவார்கள். அசாம் மாநில அரசு இரண்டு நாள் அரசு விடுமுறை அளிக்கிறது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவின் மிகப்பெரிய பண்டிகை என்றால் அது மகர சங்கராந்தி. மூன்று நாள்கள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையின்போது, கருப்பு எள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். குளிர்காலத்தில் அறுவடை செய்யப்படும் கரும்பிலிருந்து எடுக்கப்படும் புதிய வெல்லத்தைப் பயன்படுத்தி பல்வேறு இனிப்புகளை செய்து கொண்டாடுவார்கள்.

publive-image

இங்கு முதல் நாள் போகி என்றும், இரண்டாம் நாள் சங்க்ரந்த் என்றும், மூன்றாம் நாள் கிங்க்ராண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

பல்வேறு நிறங்களில் விதவிதமானப் பட்டங்களை செய்து மாலையில் பறக்கவிட்டு விளையாடும் பழக்கம் அம்மாநில மக்களிடம் உள்ளது.

குஜராத்

குஜராத்தில் இந்தப் பண்டிகையின் பெயர் "உத்ராயண்". பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றுதான் அதைக் கூற வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் நபருக்கு ஒரு பட்டம் எனக் காலை முதல் மாலை வரை பறக்க விட்டபடியே இருக்கிறார்கள்.

publive-image

அன்றைய தினம் உலக அளவில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டிகளை அகமதாபாத், ராஜ்கோட், பரோடா மற்றும் சூரத் ஆகிய நகரங்களில் அரசே ஏற்று நடத்திவருகிறது.

இந்தப் போட்டியில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பார்வையாளர்களாக வரும் வெளிநாட்டினரும் திரளாக கலந்துகொள்வது வழக்கம்.

publive-image

மேலும், குளிர்கால காய்கறிகள், எள்ளு விதைகள், வேர்க்கடலை மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு சமைக்கப்படும் 'உண்டியா' எனும் பதார்த்தத்தை பூரியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள்.

பஞ்சாப்,டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா

பஞ்சாப், ஹரியானா, இமாச்சாலப் பிரதேசம் மாநிலங்களில் அறுவடைத் திருநாளை "லொஹரி" என்ற பெயரிலும், ஹரியானாவில் "மாகி" என்ற பெயரிலும் கொண்டாடி மகிழ்கிறார்கள். பெயர்கள் வேறாக இருந்தாலும் கொண்டாடும் முறை ஒன்றுதான். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 13 ஆம் நாள் 'லொஹரி' கொண்டாடப்படும்.

publive-image

பஞ்சாப் மாநில மக்கள் அன்றைய தினம் நள்ளிரவு 12 மணியளவில் குடும்பத்தார் அனைவரும் வந்து, தீயை மூட்டி அதைச் சுற்றிலும் அமர்ந்து கொள்வது வழக்கம். அப்போது பாரம்பரிய பாடல்களுடன் நடனமாடி மகிழ்கிறார்கள். அதேபோல், எள், வெல்லம் மற்றும் பால் கலந்த இனிப்புகள் அதிகம் செய்வார்கள்.

ஒரிசா மற்றும் சத்தீஸ்கர்

இப்பண்டிகையை ஒரிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மட்டும் ஆட்டம், பாட்டம் என ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.

பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபத்தின் சந்தோஷத்தைக் கொண்டாட ஆண், பெண் இருபாலருமே மது அருந்தி மயங்கி இருப்பதும் பண்டிகையின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்கள்

publive-image

இந்த நாளுக்காக ஒரிசாவின் பூரி ஜெகநாத் கோயிலில் இரண்டுமுறை அலங்காரங்கள் செய்து சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அதேபோல், சத்தீஸ்கர் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்டு.

உத்தர பிரதேசம்

இந்த மாநிலத்தில் பொங்கல் 'கிச்சேரி' என்று அழைக்கப்படுகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகள் சங்கமம் ஆகும் இடத்திற்குச் சென்று நீராடி வருவது வழக்கம்.

கேரளா

கேரளாவில் பொங்கல் தமிழக எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கொண்டாடப்படுகிறது. மற்ற இடங்களின் கோயில்களில் அன்றைய தினத்தில் சிறப்பு ஆரத்திகள் எடுக்கப்படும். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றங்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் விசேஷத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் கூடி பொங்கல் வைக்கிறார்கள்.

publive-image

பொங்கல் பண்டிகை வெவ்வேறு மாநிலங்களில் விதவிதமான பெயர்களிலும், சடங்கு முறையிலம் மக்கள் கொண்டாடினாலும், விவசாயிகள் திருவிழாவாக ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் தலை நிமிர்ந்து வளம்வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pongal Pongal Festival Happy Pongal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment