முட்டைகள் விற்று பணக்காரனாகும் 8 வயது இளம் தொழிலதிபர்

இப்படியே போனால், முட்டை வியாபாரம் மூலம் வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை ஜேம்ஸ் வியாட் பணம் சம்பாதிக்க முடியும் என கணிக்கப்படுகிறது. ...

சொந்த தொழிலை செய்வதற்கு வயதோ, அனுபவமோ, கல்வித்தகுதியோ, பணமோ தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறான் இங்கிலாந்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ஜேம்ஸ் வியாட்.

இங்கிலாந்தின் டாம்வர்த் நகரை சேர்ந்த 8 வயது சிறுவன் ஜேம்ஸ் வியாட். ’சேனல் 4’ எனும் தொலைக்காட்சியில் “நீங்கள் எப்படி பணக்காரர் ஆனீர்கள்?” என்ற நிகழ்ச்சியை பார்த்தான். அதில், புகழ்பெற்ற மில்லியனர்கள் எல்லாம் அவர்கள் எவ்வாறு பணம் ஈட்டினர் என்பது குறித்து சொல்வார்கள். ஒருமுறை அந்த நிகழ்ச்சியில் முட்டை வியாபாரம் செய்து பணக்காரராகியவரின் கதை குறித்து ஒளிபரப்பப்பட்டது. அதை பார்த்த ஜேம்ஸ் வியாட்டுக்கு தானும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றொரு எண்ணம் உதிர்த்தது. இந்த வயதில் நம்மால் என்ன முடியும் என நினைக்காமல், தன்னிடம் உள்ள பணத்தைக்கொண்டு தன் கனவை நினைவாக்க முனைந்தான். கடந்த ஜூன் மாதம் தன்னிடமிருந்த பத்து ரூபாயை முதலீடாக வைத்துக்கொண்டு தொழிலைத் துவங்கினான். முட்டைகளை வாங்கி மற்றவர்களுக்கு விற்க ஆரம்பித்தான்.

அவனுக்கு அவருடைய தாய் ஜியார்ஜினாவும் துணை நின்றார். அவனுக்காக ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை ஆரம்பித்தார். விவசாயிகளிடமிருந்து நிறைய முட்டைகளை வாங்கி வியாபாரிகளுக்கு விற்க ஆரம்பித்தான் சிறுவன் ஜேம்ஸ் வியாட். இப்போது வாரத்திற்கு 250 ரூபாய் அளவில் லாபம் ஈட்டுகிறான். ஒவ்வொரு பேக்கிலும் 6, 12, 30 என வெவ்வேறு எண்ணிக்கையில் முட்டைகளை அடைத்து விற்பனை செய்கிறான் சிறுவன் ஜேம்ஸ். அதற்கேற்றாற் போல் விலையும் இரண்டு ரூபாயிலிருந்து ஆறு ரூபாய் வரை மாறுபடுகிறது. தொழில் வளரத் துவங்கியவுடன் ‘மிஸ்டர் ஃப்ரீ ரேஞ்’ (Mr Free Range) என்று தன் தொழிலுக்கு பெயர் வைத்தான் ஜேம்ஸ் வியாட்.

இதே அளவில்,அவனது வாடிக்கையாளர்கள் உயர்ந்துகொண்டே இருந்தால் வருடத்திற்கு 13 ஆயிரம் ரூபாய் வரை ஜேம்ஸ் லாபம் ஈட்டுவான் என தெரிகிறது. இப்படியே போனால், வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை அவனுடைய தொழிலில் பணம் சம்பாதிக்க முடியும்.

படிப்பை மட்டும் பார்க்காமல், தன் வயதில் சிறிய தொழிலை புதுமையான முறையில் துவங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறான் ஜேம்ஸ்.

×Close
×Close