Advertisment

வீடு, மனை வாங்குபவர்களை பட்டா காப்பீடு எப்படி பாதுகாக்கிறது?

ஒரு சொத்தை வாங்குபவர் உரிய சிரத்தையோடு பட்டா முதலிய ஆவணங்களை விரிவாக சரிப்பார்த்தாலும், சொத்தின் பட்டாவில் ஒரு சிறு தவறையோ அல்லது ஒரு குறைபாட்டையோ கவனிக்காமல் தவற விட்டால் அது சொத்து வாங்குபவர் அல்லது கடன் தருபவரின் ஆர்வத்தை பாதிக்கக் கூடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how title insurance can help home buyers real estate

how title insurance can help home buyers real estate

பட்டா தொடர்பான சிக்கல்களில் இருந்து வீடு, மனை வாங்குபவர்கள் மற்றும் சொத்து பரிவர்ததனையில் ஈடுபட்டுள்ள மற்றவர்களின் நலனை பாதுகாத்திட கட்டிட, மனை விற்பனை (முறைபடுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) சட்டத்தில் மனைப் பிரிவு உருவாக்குபவர்களால் அந்த சொத்தின் பட்டாவுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Advertisment

மனை பிரிவு உருவாக்குபவரிடம் இருந்து ஒரு மனை வாங்கும் போது, பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள சரத்துகளை சரிப் பார்ப்பீர்கள். ஆனால் அந்த பத்திரத்தின் அசல் தாய் பத்திரத்தில் உள்ள சங்கிலி தொடர் போன்ற பட்டா மாறுதல்கள் குறித்து அரிதாக தான் சரிப்பார்ப்போம். ஆனால் அது மிக முக்கியமான ஆவணம்.

சில நேரங்களில் ஒரு சொத்துக்கு பல உரிமையாளர்கள் இருப்பார்கள். எனவே பட்டாவின் உண்மைத் தன்மையை சரிபார்க்க வாரிசு சான்றிதழ் என்பதும் மிக அத்தியாவசியமான ஆவணமாகிறது. பொதுவாக சொத்து வாங்குபவரின் வழக்கறிஞர் சொத்தின் பட்டாவை சரிபார்க்க வேண்டும். அப்போது தான் அந்த சொத்தில் எந்தவித குறைபாடோ அல்லது மோசடியோ இல்லை என்பது உறுதி செய்யப்படும்.

என்றாலும் பெரும்பாலும் வாங்குபவர்கள் இந்த வகையான ஆவணங்களை அணுகுவதற்கு வாய்ப்பில்லாமலோ, அது குறித்த அறிவு இல்லாமலோ அல்லது அதற்கான பணவசதி இல்லாமலோ அவற்றை உரிய சிரத்தையோடு முன்னெடுப்பதில்லை.

பாதுகாப்பிற்காக ’பட்டா காப்பீடு’

ஒரு சொத்தை வாங்குபவர் உரிய சிரத்தையோடு பட்டா முதலிய ஆவணங்களை விரிவாக சரிப்பார்த்தாலும், சொத்தின் பட்டாவில் ஒரு சிறு தவறையோ அல்லது ஒரு குறைபாட்டையோ கவனிக்காமல் தவற விட்டால் அது சொத்து வாங்குபவர் அல்லது கடன் தருபவரின் ஆர்வத்தை பாதிக்கக் கூடும்.

உரிய சிரத்தையோடு பட்டா முதலிய ஆவணங்களை விரிவாக சரிப்பார்த்த பிறகும் சொத்தின் பட்டாவில் உள்ள பிரச்சனை தொடர்பாக ஏற்படக்கூடிய சிக்கல்களில் இருந்து ’பட்டா காப்பீடு’ சொத்து வாங்குபவரை பாதுகாக்கிறது. மற்ற காப்பீட்டுத் திட்டங்களை போல சொத்து வாங்குபவர் ஒரு சிறிய தொகையை காப்பீட்டு சந்தாவாக சொத்து வாங்கும் போது செலுத்த வேண்டும். அது பட்டாவில் ஏதேனும் ஊறு இருந்தால் அவற்றை காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடும். ஒரு சொத்து பரிவர்த்தனையின் போது பட்டாவில் உள்ள சிக்கல்கள் காரணமாக ஏற்படக் கூடிய நஷ்டத்தில் இருந்து மனை உருவாக்குபவர் அடுத்ததாக அந்த மனையை வாங்குபவர், போன்ற பலதரப்பட்ட கட்சிகளை பட்டா காப்பீடு பாதுகாக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment