பாத்ரூம் பைப்பில் நாள்பட்ட உப்புக் கறை... பல் தேய்க்கும் பேஸ்ட் போதும்; பளீச் ஆக்கலாம்!

உங்கள் பாத்ரூம் டாப்பில் உப்புக்கறை படிந்து, ஆங்காங்கே வெள்ளைத் திட்டுத் திட்டாக அசிங்கமாக இருக்கிறதா? இந்தக் கறையைப் போக்க கஷ்டப்படத் தேவையில்லை.

உங்கள் பாத்ரூம் டாப்பில் உப்புக்கறை படிந்து, ஆங்காங்கே வெள்ளைத் திட்டுத் திட்டாக அசிங்கமாக இருக்கிறதா? இந்தக் கறையைப் போக்க கஷ்டப்படத் தேவையில்லை.

author-image
D. Elayaraja
New Update
Sour idli batter home hacks

Sour idli batter home hacks

இன்றைய காலக்கட்டத்தில் நிலத்தடி நீரே பல இடங்களில் உப்பு நீராகத்தான் இருக்கிறது. இதன் காரணமாக குளியல், அறை, கழிப்பறை உள்ளிட்ட இடங்கள், சமையலறையில் உள்ள வாஷ்பேஷன் உள்ளிட்ட பைப்களில் உப்புக்கரை படித்து இருப்பது வழக்கம் தான். இதை நீக்குவதற்கு பல வழிகளை முயற்சி செய்வார்கள். ஆனால் ஒரு பேஸ்டை வைத்தே இந்த உப்பு கரைகளை நீக்கிவிட முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

Advertisment

உங்கள் பாத்ரூம் டாப்பில் (குழாய்) உப்புக்கறை படிந்து, ஆங்காங்கே வெள்ளைத் திட்டுத் திட்டாக அசிங்கமாக இருக்கிறதா? இந்தக் கறையைப் போக்க கஷ்டப்படத் தேவையில்லை. ஒரே ஒரு எளிமையான பொருளைப் பயன்படுத்தி, உங்கள் டாப்பை பளிச்சென்று சுத்தம் செய்துவிடலாம். இதற்குத் தேவைப்படுவது பல் தேய்க்கும் பேஸ்டு (Toothpaste) மட்டும்தான்.

உங்கள் வீட்டில் இருக்கும் பல் தேய்க்கும் பேஸ்டை கொஞ்சமாக எடுத்துக்கொள்ளுங்கள். உப்புக்கறை படிந்துள்ள டாப்பின் எல்லாப் பக்கங்களிலும் நன்றாகப் பூசி விடுங்கள். சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை அப்படியே ஊற விடுங்கள். பிறகு, ஒரு பழைய பிரஷ் அல்லது ஸ்க்ரப்பர் கொண்டு லேசாகத் தேய்த்துக் கழுவுங்கள். டாப்பைக் கிளீன் செய்வதற்கு முன் அது எப்படி இருந்தது என்று நினைத்துப் பாருங்கள். தேய்த்து கழுவியவுடன், இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டு பாருங்கள்.

உப்புக்கறைகள் நீங்கி, உங்கள் பாத்ரூம் டாப் பளிச் பளிச் என்று ஜொலிக்கும். பேஸ்டு ஒன்று மட்டுமே போதும், உங்கள் வீட்டு பாத்ரூம் குழாயை புத்தம் புதியது போல மாற்றலாம்.

Advertisment
Advertisements
Tamil Lifestyle Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: