/indian-express-tamil/media/media_files/2025/10/05/bathroom-2025-10-05-15-23-57.jpg)
நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பொதுவாக கடின நீரையை பயன்படுத்துகின்றனர். அதிலும், வாடிகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம், அங்கு குழாயை திறந்தால் உப்பு தண்ணீர் மட்டும் தான் வரும். நல்ல தண்ணீர் வேண்டும் என்றால் லாரிகளில் தண்ணீர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
இப்படி நாம் உப்பு தண்ணீரை (Hard water) பயன்படுத்துவதால் குளியலறை, சமையலறை சிங், கதவுகள், குழாய்கள் போன்றவற்றில் உப்புக் கறைகள் படிவது பெரும் சவாலாக உள்ளது. இந்தக் கறைகள், கதவின் அழகைக் கெடுப்பதுடன், நாளடைவில் கெட்டிப்பட்டுக் கிருமிகளின் வசிப்பிடமாகவும் மாறலாம். பிளாஸ்டிக், ஃபைபர் அல்லது கண்ணாடி போன்ற வகைக் கதவுகளில், காய்ந்த நீரின் சுவடுகள் வெள்ளையாகப் படிந்து சுலபத்தில் நீக்க முடியாதபடி மாறிவிடுகின்றன.
உப்புக் கறை ஏற்படுவது ஏன்?
குளியலுக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் அதிக அளவில் கால்சியம் (Calcium) மற்றும் மக்னீசியம் (Magnesium) போன்ற தாது உப்புகள் கலந்திருப்பதுதான் இதற்குக் காரணம். கதவுகளில் படும் நீர் ஆவியாகிப் போகும்போது, இந்த தாதுப் பொருட்கள் நுண்ணிய படலமாகப் படிந்து, காய்ந்து போகின்றன. இதுவே "உப்புக் கறை" என்று அழைக்கப்படுகிறது.
முறையாகத் தினமும் சுத்தம் செய்யாத பட்சத்தில், இந்தக் கறைகள் கெட்டிப்பட்டு நீக்குவது கடினமாகிவிடுகிறது. அதன்பிறகு எதை வைத்து தேய்தாலும் இந்த கறைகள் போவது இல்லை. இப்படி நாள்பட்ட உப்புகறைகளை வெறும் உப்பு மற்றும் துணிக்கு பயன்படுத்தும் சோப்பு பவுடரை வைத்து எப்படி ஒரு நொடியில் கிளீன் செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்பிள் டிப்ஸ்
ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் தூள் உப்பு, இரண்டு ஸ்பூன் சலவை தூள் மற்றும் ஒரு ஸ்பூன் சோடா உப்பு சேர்க்க வேண்டும். இதனுடன் வினிகர் சேர்த்து நன்கு கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வினிகர் ஊற்றியதும் நுரைத்து வரும் அப்போது ஒரு ஸ்பூன் வைத்து இந்த கலவையை நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது நமக்கு ஒரு லிக்யூட் ரெடியாகிவிடும்.
இந்த லிக்யூடை எந்த இடத்தில் உப்புக் கறை உள்ளதோ அந்த இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். பின்னர் ஒரு 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். 20 நிமிடத்திற்கு பிறகு நன்கு தண்ணீர் வைத்து கழுவினால் உப்புக் கறை படிந்த இடங்கள் பளபளவென்று இருக்கும். உங்கள் வீட்டின் கதவுகள் போன்றவற்றில் பெயிண்ட் அடித்திருந்தால் இந்த கலவையை பயன்படுத்திவிட்டு வெறும் தண்ணீரில் மட்டும் சுத்தம் செய்யுங்கள். இரும்பு ஸ்க்ரப்பர் போன்றவற்றை பயன்படுத்தும் போது அந்த பெயிண்ட் உரிந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.