கிச்சன் பைப்பில் அடைப்பு? பெரிய ராக்கெட் சயின்ஸ் இல்ல; இப்படி சிம்பிளா க்ளீயர் பண்ணுங்க!

கிச்சன் பைப்பில் ஏற்படும் அடைப்பை காசே செலவழிக்காமல் சிம்பிளா எப்படி சுத்தம் செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கிச்சன் பைப்பில் ஏற்படும் அடைப்பை காசே செலவழிக்காமல் சிம்பிளா எப்படி சுத்தம் செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
singh

நம்  வீட்டில் இருக்கும் கிச்சன் சிங் நம்மை போன்று ஓயாமல் உழைக்கிறது. அதாவது கழிவு நீரை வெளியேற்றுகிறது. இப்படி காலையில் இருந்து ராத்திரி வரை ஓயாமல் உழைக்கும் சிங் திடீரென நமக்கு ஒரு பெரிய தலைவலியை ஏற்படுத்தும். அதுதான் சிக்சன் சிங் அடைப்பு. பொதுவாக நாம் என்ன செய்வோம் ஞாபகம் இருந்தால் குப்பைகளை குப்பை தொட்டில் போட்டுவிட்டு பாத்திரங்களை கிச்சன் சிங்கில் போடுவோம், இல்லையென்றால் அப்படியே சிங்கில் போட்டுவிடுவோம்.

Advertisment

அப்போது நம் வீட்டில் உள்ள சோற்று பருக்கைகள், காய்கறிகள், எண்ணெய் பிசுகள், டீ தூள்கள் என அனைத்தும் கிச்சன் சிங்கில் தான் போய் தங்கும். இவை எல்லாம் சேர்ந்து ஒரு நாள் வேலையை காட்டிவிடும். அது ஒன்றும் இல்லை சிங்கில் அடைப்பு ஏற்பட்டு வீடு முழுவதும் துர்நாற்றம் வீசும். இந்த வாடையானது நம் நிம்மதியை ஒட்டு மொத்தமாக கெடுத்துவிடும். தூக்கத்தில் கூட கிச்சன் சிங் ஞாபகம் தான் நம் கனவில் வரும். இதுக்காக  பிளம்பரை கூப்பிட்டு காசை கரியாக்குறதுக்கு பதிலா, நம்ம கிச்சன்லயே இருக்குற ஒரு சிம்பிளான பொருளை வெச்சு இந்த பிரச்சனையை ஈசியா சமாளிக்கலாம். 

அதுதான் நம்ம பாத்திரம் தேய்க்கிற லிக்விட் சோப். பாத்திரம் கழுவும் லிக்யூட்டின் முக்கியமான வேலை எண்ண பாத்திரத்தில் உள்ள எண்ணெய் பிசுகுகள், அழுக்குகளை நீக்குவது தான். அதேதான் இங்கயும் வேலை செய்கிறது. நாம் சமைக்கும்போது  எண்ணெய், நெய், கொழுப்புப் பொருட்கள் எல்லாத்தையும் சிங்க்ல ஊத்தும்போது, அது கொஞ்சம் கொஞ்சமாக பைப் சுவர்களில் படிந்து, காலப்போக்குல் அடப்பை உண்டாக்கி விடுகிறது. இது போன்று  படிந்திருக்கும் கொழுப்பை கரைக்க, பாத்திரம் தேய்க்கிற லிக்விட் ஒரு சூப்பரான ஆயுதம். அதுல இருக்குற வேதிப்பொருட்கள், இந்தக் கொழுப்பு மூலக்கூறுகளை உடைச்சு, தண்ணில கரைய வெச்சுடும். இதனால், அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் துர்நாற்றமும் நீக்கப்படுகிறது.

சிம்பிள் டிப்ஸ்

முதலில் உங்கள் வீட்டு சிங்கில் நிறைந்து கிடக்கும் பாத்திரங்களை அப்புறப்படுத்த வேண்டும். இப்போது ஒரு கைப்பிடி அளவுக்கு பாத்திரம் தேய்க்கிற லிக்விட்டை எடுத்து, நேராக சிங்க் ஓட்டையில் ஊற்ற வேண்டும். ஒரு ஐந்து நிமிடத்திற்கு பிறகு அந்த லிக்விட் உள்ளே சென்று அங்கு படிந்திருக்கும் அழுக்குகளை அப்புறப்படுத்தும் வேலைகளை செய்ய தொடங்கிவிடும். அதுக்கப்புறம், நல்லா சூடாக இருக்குற வெந்நீரை மெதுவாக சிங்கில் ஊற்ற வேண்டும். 

Advertisment
Advertisements

வேகமாக ஊற்றாமல், ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு தொடர்ந்து ஊத்திக்கிட்டே இருங்க. சூடான நீரும், சோப்பு லிக்விடும் சேர்ந்து உள்ளே இருக்குற எல்லா அழுக்கையும் கரைத்து, பைப்பை பளிங்கு மாதிரி சுத்தமாக்கிடும். வாரத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இரவு தூங்க செல்வதற்கு முன்பு இதை செய்துவிட்டு படுத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்து பார்த்தால் உங்க சிங் ஃப்ரெஷ்ஷா எந்த வாடையும் இல்லாமல் சூப்பராக இருக்கும். இனிமேல் சிங்கில் அடைப்பு ஏற்பட்டால் இந்த டெக்னிக்க ஃபாலோ பண்ணுங்க.

Kitchen Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: