/indian-express-tamil/media/media_files/2025/10/22/sink-2025-10-22-20-54-07.jpg)
நம் வீட்டு சமையலறையில் முக்கியமான ஒரு பொருள் சிங்க் தான். இவை தான் அனைத்து கழிவு நீரையும் வெளியேற்றி அயராது உழைக்கிறது. ஆனால், இந்த சிங்க் ஒரு நாள் தன் வேலையை செய்யாவிட்டால் அது போன்ற தலைவலி வேறு எதுவும் இல்லை. அது ஒன்றும் இல்லை கழிவு நீரை வெளியேற்றவில்லை என்றால் அது பெரும் தலைவலியாக மாறிவிடும்.
அதுமட்டுமல்லாமல், சிங்கை க்ளீன் செய்வது மிகப்பெரிய வேலையாக இருக்கும். என்ன க்ளீன் செய்தாலும் அதில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு, சில வாடை போவதே இல்லை. அதுமட்டுமின்றி சில நேரம் நாம் க்ளீன் செய்யும் பொழுது புத்தம் புதிது போன்று இருக்கும் சிங் அடுத்த சில நிமிடங்களில் நாம் வேலை பார்க்கும் பொழுது மீண்டும் பழைய நிலைமைக்கே வந்துவிடும். இதற்கு ஏன் நாம் இப்படி கை வலிக்க க்ளீன் செய்தோம் என்று தோன்றும்.
இனிமேல் உங்களுக்கு இந்த கவலை வேண்டாம் கை வலிக்காமல் நொடியில் கிட்சன் சிங்கை எப்படி க்ளீன் செய்யலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். ஒரு பாத்திரம் தேய்க்கும் ஸ்க்ரப்பரில் பேஸ்ட் மற்றும் பாத்திரம் கழுவும் லிக்யூடை எடுத்துக் கொள்ளவும். சிங்க் மீது சிறிது பேக்கிங் சோடா போட்டு இந்த ஸ்க்ரப்பரை வைத்து நன்கு தேய்க்கவும். சிங்க மட்டுமல்லாமல் அதில் இருக்கும் குழாய்கள் மீதும் தேய்க்கவும். நன்கு தேய்த பின்னர் தண்ணீர் வைத்து சுத்தம் செய்யவும்.
இதேபோன்று சிங்க் பைப்பில் இருக்கும் கழிவுகளை போக்க சிங்க் குழாயில் சிறிது பேக்கிங் சோடா, பாத்திரம் கழுவும் லிக்யூட் மற்றும் வினிகர் சேர்க்கவும். இப்போது இந்த மூன்றும் வினை புரிந்து நுரை மேலே வரும் அப்போது மிதமான சுடு தண்ணீரை அந்த குழாயில் ஊற்றவும். இதனால், குழாயில் உள்ள அழுக்குகள் நொடி பொழுதில் காணாமல் போய்விடும். இதனை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்து வரும் போது உங்கள் வீட்டு சிங்க் மற்றும் அதன் குழாய் சுத்தமாக இருக்கும். வீட்டில் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.