/indian-express-tamil/media/media_files/2025/10/17/kitchen-2025-10-17-13-58-54.jpg)
வீடுகளில் பெண்கள் அதிகம் நேரம் செலவழிக்கும் இடம் சமையல் அறை தான். காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என உணவுகள் சமைப்பதிலேயே பல மணிநேரம் சமையல் அறையில் கழிந்து விடுகிறது. நாம் சமையல் செய்யும் பொழுது காய்கறிகளை எண்ணெய்யில் போட்டு வதக்குவோம். அப்போது கேஸ் அடுப்பின் மீது எண்ணெய் கறைகள் படியும். அதுமட்டுமல்லாமல், மசாலா பொருட்களை எடுக்கும் பொழுது அந்த மசாலா பொருட்களும் கேஸ் அடுப்பின் மீது விழுந்து கறைகளாக படிந்துவிடும்.
இப்படி படியும் அழுக்குகளை நாம் சாதாரண துணிகளை வைத்து துடைத்து எடுப்போம். அந்த நேரம் அந்த கறைகள் மறைந்தது போன்று இருக்கும். ஆனால், நாளாக நாளாக அந்த கறைகள் வலுப்பெற்று கேஸ் அடுப்பை விட்டு நான் போகவே மாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருக்கும். இந்த கறைகளை நாம் என்ன வைத்து தேய்தாலும் போகவே போகாது. இந்த கறைகள் நமக்கு பெரும் சவாலாக இருக்கும்.
இப்படிபட்ட கறைகளை நீக்க இனிமேல் பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இந்த விடாப்பிடியான கறைகளை சுலபமாக எப்படி நொடி பொழுதில் போக்கலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்பிள் டிப்ஸ்
ஒரு பாத்திரத்தில் சிறிது வினிகர் மற்றும் பேக்கிங் சோடா எடுத்துக் கொண்டு நன்கு கலக்கவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைக்கவும். இந்த கலவையை எண்ணெய் கறை, அழுக்குகள் படிந்த கேஸ் அடுப்பின் மீது ஸ்ப்ரே செய்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் இரும்பு ஸ்க்ரப்பர் கொண்டு நன்றாக தேய்த்து கழுவிட்டு பார்த்தால் உங்கள் அடுப்பு புதுசு மாதிரி ஆகிவிடும்.
இந்த கலவை வெறும் கேஸ் அடுப்பு துடைக்க மட்டும் தான் பயன்படுத்த முடியுமா என்றால் இல்லை. உங்கள் வீட்டில் எங்கெல்லாம் விடாப்பிடியான கறைகள் இருக்கிறதோ அங்கு எல்லாம். இந்த லிக்யூடை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு நாம் சிலிண்டர் வைத்திருக்கும் இடத்தில் எந்த ஒரு ஸ்டாண்ட் எதுவும் வைத்து சிலிண்டர் வைத்திருக்க மாட்டோம்.
சிறிது நாட்களுக்கு பிறகு சிலிண்டர் வைத்திருக்கும் இடத்தில் இரும்பு கறை படிந்துவிடும். இந்த கறையை என்ன செய்தாலும் நீக்க முடியாமல் தவிப்போம். அப்படி பட்ட இடங்களை இந்த லிக்யூடை கொண்டு நொடி பொழுதில் சுத்தம் செய்துவிடலாம். அதேபோன்று கேஸ் அடுப்பு வைத்திருக்கும் ஸ்லாப், சமையல் சிங் போன்ற இடங்களை இந்த லிக்யூடை பயன்படுத்தி சுலபமாக சுத்தம் செய்துவிடலாம். இனிமேல் கடினமான கறைகளை கை வலிக்க தேய்க்காமல் இந்த ஒரு லிக்யூடை பயன்படுத்தி ஈசியா சுத்தம் செய்துவிடுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.