/indian-express-tamil/media/media_files/2025/10/14/cookker-2025-10-14-15-08-29.jpg)
சமையலறையில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக குக்கர் மாறியுள்ளது. நம் நேரத்தை மிச்சப்படுத்தவும் எரிவாயுவை சிக்கனப்படுத்தவும் குக்கர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த குக்கரே மக்கர் பண்ணும். அதாவது, நாம் எங்கயாவது அவசரமாக கிளம்பும் நேரம் குக்கரை சமையலுக்கு பயன்படுத்துவோம். அப்போது உங்கள் குக்கரில் இருந்து விசில் வராமல் இருந்து அந்த உணவு பொருள் அடிப்பிடித்தால் கோபம் உச்சிக்கு ஏறும் இல்லையா.
அப்போது நாம் என்ன நினைப்போம் அந்த குக்கரை மாற்றிவிட்டு வேறு குக்கரை வாங்கலாம் என்று நினைப்போம். ஆனால், இனிமேல் குக்கரை மாற்றி பணத்தை விரயம் செய்ய வேண்டாம். குக்கரை ஒரே ஒரு பொருளை மட்டும் சரி செய்தால் போதும் உங்கள் குக்கர் புதுசு மாதிரி வேலை பார்க்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்பிள் டிப்ஸ்
குக்கர் விசிலின் கீழ் பகுதியில் கத்தியை வைத்து எடுத்தால் வளையம் போன்ற ஒரு பொருள் இருக்கும். அதனை எடுத்துவிட்டு பார்தால் சிறிய வடிவில் இரண்டு ஆணிகள் இருக்கும். இந்த ஆணிகள் பழுதாகிவிட்டால் குக்கரில் விசில் வருவதில் பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமல்லாமல், குக்கரில் இருந்து விசில் வழியாக தண்ணீர் வெளியேறுதல், குக்கர் விசில் சரியாக மாட்ட முடியாமல் போகும்.
இந்த பிரச்சனை ஏற்படக் கூடாது என்றால் அந்த ஆணியை தூக்கி வீசிவிட்டு புது ஆணிகள் வாங்கி மாட்டினால் போதும். உங்கள் குக்கர் விசிலை நன்றாக துடைத்துவிட்டு இந்த ஆணிகளை வாங்கி மாட்டுங்கள். இப்போது உங்கள் குக்கர் புதுசு போன்று செயல்படும். இதற்கு என்று குக்கரை மாற்ற தேவையில்லை.
குக்கர் பயன்பாடுகள்
குக்கர் பழுதாகும் வரை பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. நீண்ட ஆண்டுகள் பயன்படுத்தும் போது குக்கரில் கண்ணுக்குத் தெரியாத சிறிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். இது எதிர்பாராத நேரத்தில் விபத்தை ஏற்படுத்தலாம். குக்கரின் பாகங்களான விசில், கேஸ்கட் (ரப்பர்) மற்றும் பாதுகாப்பு வால்வு ஆகியவற்றைத் தவறாமல் பரிசோதித்து, சேதமடைந்தால் உடனடியாக மாற்றுவது அவசியம்.
விபத்துகளை தவிர்க்க விசில் துளை அடைபடாமல் பார்த்துக்கொள்வது, குக்கரின் மூடியை இறுக்கமாக மூடுவது, அதிகப்படியான தண்ணீர் சேர்ப்பதைத் தவிர்ப்பது, மேலும் ஒரு பிராண்ட் குக்கரின் எடையை (Weight) மற்றொரு குக்கரில் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிக அவசியம் என்று இல்லத்தரசிகள் மற்றும் நிபுணர்கள் அறிவுறுத்திவுள்ளதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.