/indian-express-tamil/media/media_files/2025/10/16/buget-2025-10-16-16-13-10.jpg)
பொதுவாக நகரங்களில் தண்ணீர் சிறிது உப்பு (Hard water) கலந்து தான் வரும். அதுவும் வாடகை வீட்டில் கேட்கவே வேண்டாம் அங்கு அவசியத் தேவைகளுக்கு உப்பு தண்ணீர் மட்டும் தான் வரும். மற்றபடி நம் சமைப்பதற்கு, குடிப்பதற்கு தனியாக தண்ணீர் வாங்க வேண்டி இருக்கும். இப்படி உப்பு தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்துவதால் நம் சமையலறை, பாத்ரூமில் இருக்கும் பக்கெட்டுகள், மக்குகளில் உப்பு கறை படிந்துவிடும்.
நாள்பட நாள்பட இந்த உப்பு கறை மிகவும் அழுத்தமாக படிந்து நான் பக்கெட்டை விட்டு போகவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும். இந்த பக்கெட்டில் படிந்திருக்கும் உப்பு கறைகளை போக்குவதற்கு நாம் பெரும்பாலும் லிக்யூட் போன்ற பொருட்களை பயன்படுத்துவோம். ஆனாலும், இந்த உப்பு கறை நான் போகவே மாட்டேன் என்று இருக்கும். இதனால் சிலர் உப்பு கறை படிந்த பக்கெட்டுகள், மக்குகளை முடிந்த அளவு பயன்படுத்திவிட்டு தூக்கி வீசிவிடுவார்கள்
ஒரு சிலர் தூக்கி வீச மனமில்லாமல் அப்படியே வைத்திருப்பார்கள். இப்படி நமக்கு பெரும் தலைவலியாக இருக்கும் உப்பு கறையை வீட்டில் இருக்கும் ஒரு பொருளை கொண்டு நொடி பொழுதில் நீக்கிவிடலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அது எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சிம்பிள் டிப்ஸ்
வீட்டில் இருக்கும் புளித்த இட்லி மாவை உப்பு கறைகள் படிந்துள்ள பக்கெட், மக்கு ஆகியவற்றில் உப்பு கறைமீது படும்படி கைகளை வைத்து நன்கு தேய்க்கவும். இதை நீங்கள் வெறும் கைகளாலும் செய்யலாம் அல்லது கையுறை அணிந்து கொண்டும் செய்யலாம். உப்பு கறைகள் அதிகமாக இருக்கும் பக்கெட்டில் அதிக மாவு தேவைப்படும். மாவு தடவிய பக்கெட்டுகள், மக்கை ஒரு 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
15 நிமிடங்களுக்கு பிறகு இட்லி மாவு தேய்த்த பக்கெட்டுகள், மக்குகள் ஆகியவற்றை ஸ்டீல் ஸ்க்ரப்பர் வைத்து நன்றாக தேய்த்துவிடுங்கள். உப்பு கறை அதிகமாக இருந்தால் சிறிது அழுத்தம் கொடுத்து கறைகளை தேய்த்துவிடுங்கள். நன்கு தேய்த பின்னர் தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு பார்த்தால் உப்பு கறை படிந்த உங்கள் பக்கெட்டுகள், மக்குகள் புத்தம் புதுசாக மாறியிருக்கும். இதை வாரத்தில் ஒருமுறை செய்தால் உப்பு கறைகள் அதிகம் படியாமல் பாதுகாக்கலாம். இனிமேல் கை வலிக்க பக்கெட்டை தேய்க்காமல் இந்த ஒரு டிப்ஸை யூஸ் பண்ணி உங்க வீட்டு பொருட்களை சுத்தம் செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.