'பூ' கீழ கொட்டாது... கொத்து கொத்தாக காய்க்கும்; பெரிய செலவு இல்லாத உரம்; மாதுளைக்கு இப்படி குடுங்க!

உங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் இருக்கும் மாதுளை செடியை எப்படி கொத்து கொத்தாக காய்க்க வைக்கலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் இருக்கும் மாதுளை செடியை எப்படி கொத்து கொத்தாக காய்க்க வைக்கலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
pome

நகர மயமாதலைத் தொடர்ந்து பலரும் தாங்கள் இருக்கும் வீட்டின் மாடியில் மாடி தோட்டங்களை அமைத்து வருகின்றனர். இந்த மாடி தோட்டம் அமைக்க அரசும் உதவி செய்து வருகிறது. மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை இந்த மாடி தோட்டம் மூலம் விளைவித்து பயன்படுத்தி வருகின்றனர். மாடி தோட்டம் அமைக்க நகர மயமாதல் மட்டும் முக்கிய காரணம் இல்லை.

Advertisment

நாம் தற்போது பயன்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களில் அதிக ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக பரவி வரும் செய்திகளை தொடர்ந்தும் மக்கள் மாடித் தோட்டங்களை அமைக்க தொடங்கி விட்டனர். இந்த மாடி தோட்டத்தில் கத்திரிக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய் என பல விதமான காய்களை மக்கள் விளைவிக்கின்றனர். மேலும், கொய்யாக்காய், மாதுளை போன்ற பழ வகைகளையும் விளைவிக்கின்றனர்.

பொதுவாக மாடித் தோட்டத்தில் மாதுளை போன்ற பழங்களை வைக்கும் பொழுது ஒரு சில மாதுளை செடிகள் பூக்கள் பூக்குமே தவிர காய்களை போடாது. இப்படி உங்கள் வீட்டு மாடித்தோட்டத்தில் இருக்கும் மாதுளை செடியை எப்படி கொத்து கொத்தாக காய்க்க வைக்கலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

சிம்பிள் டிப்ஸ்

மாதுளை செடி நல்ல பூக்கள் பூக்க வேண்டும். பூத்த பூக்கள் எல்லாம் கனியாக மாற வேண்டும் என்றால் மாதுளை செடி சூரிய வெளிச்சத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மாதுளை செடியை நிழலில் வைத்தால் செடி நன்றாக வளரும் ஆனால், பூக்கள் பூக்கவே செய்யாது. மாதுளை செடிக்கு கடுகு, புண்ணாக்கு பயன்படுத்தி தண்ணீர் ஊற்றும் பொழுது அதிக பூக்கள் பூக்கும் அதே நேரத்தில் பூக்கள் கொட்டாமல் காயாகவும் மாறும்.

Advertisment
Advertisements

ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன், கடுகு மற்றும் புண்ணாக்கை நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும். இதனை ஒரு மூடிபோட்டு நன்கு நிழல் உள்ள இடத்தில் ஒரு நாள் அப்படியே வைத்துவிடவும். அடுத்த நாள் இந்த தண்ணீரில் சாதாரண தண்ணீர் ஒரு லிட்டர் கலந்து செடிக்கு பயன்படுத்த வேண்டும். 15 நாளைக்கு ஒருமுறை இந்த தண்ணீரை உங்கள் வீட்டு செடிக்கு பயன்படுத்தும் போது ஏற்படும் மாற்றத்தை நீங்கள் கண்கூடாக பார்ப்பீர்கள். செடிகளில் பூச்சி தாக்குதல் இல்லாமல் இருக்க ஆர்கானிக்கான ஃஸ்ப்ரேகளை பயன்படுத்தவும். 

Beauty benefit of consuming pomegranates Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: