/indian-express-tamil/media/media_files/2025/10/19/food-2025-10-19-15-18-16.jpg)
இந்த நவீன காலக்கட்டத்தில் மக்கள் காலத்திற்கு ஏற்றார்போல் ஓடுகிறார்கள். இதனால் அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க தவறுகிறார்கள். அதேபோன்று நம் உணவு பொருட்களிலும் என்ன கலப்படம் நடந்திருக்கிறது என்பதை பற்றி சிந்திக்கவும் மறுக்கிறார்கள். தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெரும்பாலான உணவுகளில் கலப்படங்கள் செய்யப்படுகின்றன.
உதாரணத்திற்கு நல்ல மிளகுகிற்கு பதிலாக பப்பாளி விதை சேர்க்கப்படுகிறது. மிளகாய் பொடியில் மரத்தூள் சேர்க்கப்படுகிறது. டீத்தூளில் சாயம் சேர்க்கப்படுகிறது. பட்டாணி மற்றும் கலர் அப்பளங்களில் சாயம் சேர்க்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு கலப்படம் நடக்கிறது. இதனை எளிய வழியில் எப்படி கண்டு பிடிக்கலாம் என்பதை நாம் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சிம்பிள் டிப்ஸ்
ஒரு கிளாஸ் தண்ணீரில் நீங்கள் கடையில் வாங்கி வந்த டீ தூளை ஒரு ஸ்பூன் போடுங்கள். அந்த டீ தூள் கிளாஸில் போட்டதும் கலராக மாறியது என்றால் அது கலப்படமான டீ தூள் என்று அர்த்தம். அதே அந்த டீ தூள் நிறம் மாறாமல் அப்படி தண்ணீருக்கு அடியில் சென்று தங்கினால் அது கலப்படம் இல்லாத டீத்தூள் என்று அர்த்தம்.
இதேபோன்று நாம் நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அனைத்து பொருட்கள் மீதும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். இதே மாதிரி ஒரு கிளாஸ் தண்ணீரில் சோம்பை சேருங்கள். தண்ணீரில் போட்டதும் சோம்பில் இருந்து நிறம் பிரிந்தால் அது கலப்படமான சோம்பு. அதற்கு மாறாக சோம்பு நிறம் மாறாமல் இருந்தால் அது கலப்படமற்ற சோம்பு.
கலப்பட மற்ற வெல்லம் நல்ல அடர் நிறைத்தில் இருக்கும். இதே கலப்படமான வெல்லம் நிறம் கம்மியாக இருக்கும். வெல்லத்தில் சர்க்கரை சேர்தால் வெல்லம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இதன் மூலம் அது கலப்படமான வெல்லம் என்பதை நாம் தெரிந்துக் கொள்ளலாம்.
நாம் தினமும் உடல் நலம் ஆரோக்கியம் பெற பட்டாணி ஊற வைத்து சாப்பிடுவோம். இந்த பட்டாணியிலும் சாயம் சேர்த்திருப்பார்கள். அதனையும் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்து கண்டுபிடிக்கலாம். அதாவது, பட்டாணி ரொம்ப நாள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும். என்றும் பார்பதற்கு கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று சாயம் சேர்த்திருப்பார்கள். இதுபோன்ற சாயம் சேர்த்த உணவு பொருட்களை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் போது நமக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.