டேஸ்டியான, ஹெல்த்தியான பாகற்காய் பருப்பு பொரியல் செய்வது எப்படி?

வைட்டமின் A, B1, B2, C நிறைந்தது. சரும வியாதிகள், கண் குறைபாடு, ரத்த கொதிப்பு, நீரழிவு, எதிர்ப்புசக்தி இன்மை ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

By: November 30, 2017, 1:47:13 PM

நித்யா மோகனசுந்தரம்

பாகற்காய் பருப்பு பொரியல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 2
வெங்காயம் – 1
பாசிபருப்பு – 3 டேபுள் ஸ்பூன்
கடலை பருப்பு- சிறிது
உளுந்து- சிறிது
காய்ந்த மிளகாய்- 2
தேங்காய் – சிறிது
கடுகு- சிறிது
சீரகம்- சிறிது
கறிவேப்பிலை- சிறிது
எண்ணெய் – தாளிக்க
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயம் மற்றும் பாகற்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளவும். பாகற்காயுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்தவுடன் தண்ணீரை வடிகட்டியில் போட்டு வடித்து எடுக்கவும். வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பருப்பு வகைகள் சேர்த்து தாளிக்கவும். பின்பு நறுக்கின வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கியவற்றுடன் பாசிபருப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பருப்பு முக்கால் பதம் வெந்ததும் பாகற்காய் சேர்த்து கிளறவும். நன்கு தண்ணீர் சுண்டியதும் தேங்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

பயன்:

பாகற்காய் இரும்பு சத்து, வைட்டமின் A, B1, B2, C நிறைந்தது. சரும வியாதிகள், கண் குறைபாடு, ரத்த கொதிப்பு, நீரழிவு, எதிர்ப்புசக்தி இன்மை ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:How to make battleguard poriyal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X