/indian-express-tamil/media/media_files/2025/10/12/pooja-things-2025-10-12-15-45-36.jpg)
வீட்டில் உள்ள பூஜை அறை எப்போதும் மங்களகரமான வாசனையுடன் இருக்க வேண்டும். இந்த நறுமணப் பூஜை பொடி, செயற்கை வாசனை திரவியங்களைப் பயன்படுத்தாமல், இயற்கையான பொருட்களின் மூலம் உங்கள் வீடு முழுவதும் கோவில் போன்று நறுமணம் கமழச் செய்யும். இந்தப் பொடியை சுவாமிப் படங்களுக்கு திலகமாக இடவும், அல்லது பூஜை அறையைச் சுத்தம் செய்யும் போது பயன்படுத்தவும், தூபத்துடன் கலந்தும் பயன்படுத்தலாம். இதனை எப்படி செய்யலாம் என்று சிவகாமி நிலையா யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஏலக்காய் - 20 எண்ணிக்கை
கிராம்பு - 20 எண்ணிக்கை
ஜாதிபத்ரி - தேவையான அளவு
சந்தனத் தூள் - 4 தேக்கரண்டி
கஸ்தூரி மஞ்சள் தூள் - 4 தேக்கரண்டி
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு (பூஜைக்குப் பயன்படுத்தப்படும்)
ஜவ்வாது தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில், ஏலக்காய், கிராம்பு, மற்றும் ஜாதிபத்ரி ஆகிய மூன்று நறுமணப் பொருட்களையும் எடுத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து, நன்கு நைஸான தூளாக அரைத்துக் கொள்ளவும். அரைக்கும்போது ஜார் சூடாகிவிடாமல் கவனமாகக் கையாளவும்.அரைத்த இந்த அடிப்படைத் தூளை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி, அதனுடன் சந்தனத் தூள், கஸ்தூரி மஞ்சள் தூள், பச்சைக் கற்பூரம் மற்றும் ஜவ்வாது தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். இதில் சேர்க்கப்படும் அனைத்து பொருட்களும் உடலுக்கும் மணதுக்கும் உற்சாகத்தை கொடுக்கும்.
சேர்க்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று முழுமையாகக் கலக்கும்படி, கைகளால் அல்லது ஸ்பூன் கொண்டு நன்கு கலந்துவிடவும். பச்சைக் கற்பூரம் முழுவதுமாகக் கரையும்வரை கலக்க வேண்டியது அவசியம்.நன்கு கலக்கப்பட்ட இந்தப் பொடியை, ஈரப்பதம் இல்லாத காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
இந்தப் பொடியை தினசரி பூஜையின்போது சுவாமிப் படங்களுக்கு திலகமாக இடலாம். சிறிதளவு பொடியை விளக்கு ஏற்றும் எண்ணெயுடன் சேர்ப்பதன் மூலம், விளக்கு எரியும்போது வீடு முழுவதும் தெய்வீக வாசம் பரவும்.இந்த எளிய முறையில் வீட்டிலேயே நறுமணமிக்க பூஜை பொடியைத் தயாரித்து, உங்கள் பூஜை அறையை எப்போதும் மங்களகரமாக வைத்திருக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.