நம் எல்லோருக்கும் தயிர் சாதம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது ஊறுகாய் தான். அதுவும் மாங்காய் ஊறுகாய் என்றால் சிலருக்கு கொள்ளைப் பிரியம். அதுவும் இந்த கோடைக்காலத்தில் எல்லோரும் தயிர் சாதத்தைக் கண்டிப்பாக சாப்பிடுவோம். அப்போது ஊறுகாய் இல்லை என்றால் எப்படி? எனவே, இந்த தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு ஏற்ற மாங்காய் ஊறுகாயை நம் வீட்டிலே செய்தால் நல்ல இருக்கும் அல்லவா! வாருங்கள் வீட்டிலேயே எளிதாக மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம். இந்த சுவையான மாங்காய் ஊறுகாய் ரெசிபியை செஃப் வெங்கடேஷ் பட் நமக்கு வழங்கியுள்ளார்.
தேவையான பொருட்கள்
மாங்காய் – ¾ கிலோ
வெந்தயம் – 2 ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 100 மி.லி
பெருங்காய தூள் – 2 ½ டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மாங்காய்களை கழுவி, ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் நன்றாக துடைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மாங்காய்களை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். நறுக்கிய மாங்காய் துண்டுகளில் 3 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு விருப்பமிருந்தால் மாங்காயை உப்பில் ஒரு அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஊற வைக்கலாம். ஊறிய பின் அதில் பெருங்காயத்தை சேர்க்க வேண்டும்.
பின்பு, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து மிதமான சூட்டில் பொன்னிறமாக வெந்தயத்தை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெந்தயம் ஆறிய பிறகு ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, மாங்காய் துண்டுகளோடு சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமாக சூடேற்றவும். அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்த பிறகு கடுகை சேர்க்கவும்.
கடுகு நன்றாக பொரிந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு அதில் மிளகாய் தூளை சேர்க்க வேண்டும்.
மிளகாய் தூள் நிறம் மாறுவதற்கு முன்னால், இந்த எண்ணெய்யை மாங்காய் துண்டுகள் மீது ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும்.
அருமையான மாங்காய் ஊறுகாய் ரெடி! இதை ஒரு பீங்கான் பாத்திரத்தில் போட்டு காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி வைக்கவும். இதனை அடுத்த மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.