/indian-express-tamil/media/media_files/2025/10/18/akal-vilakku-2025-10-18-21-10-42.jpg)
தீபாவளி என்றதும் நமக்கு முதலில் நினைவில் வருவது அகல் விளக்கு தான். தீபாவளி என்றாலே ஒளி தரும் நாள் என்று தான் பொருள். இதனாலேயே வீடு முழுவதும் பலரும் அகல் விளக்குகளை ஏற்றி ஜொலிக்க வைப்பார்கள். அப்படி நாம் அகல் விளக்கு ஏற்றும் போது சில விளக்குகளில் எண்ணெய் கசிவு ஏற்படும்.
இதனால் வீட்டில் தரை முழுவதும் பழாகிவிடும். சில விளக்குகள் தீயின் சூட்டில் விரிசல் விட ஆரம்பித்துவிடும். இது சிலருக்கு மனதில் சங்கடத்தை ஏற்படுத்தும். இப்படி நடக்கவிடாமல் தடுக்க சில வழிகளை ஃபாலோ செய்தால் போதும் அது என்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
அகல் விளக்கு ஏற்றும் போது கவானிக்கப்பட வேண்டியவை
சந்தையில் இருந்து வாங்கி வரும் அகல் விளக்குகளை அப்படியே பயன்படுத்தக் கூடாது. அதை 5 முதல் 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விளக்கு எண்ணெய்யினை உறிஞ்சுவது தடுக்கப்படுகிறது. மேலும் விளக்கில் உள்ள நுண் துளைகள் வழியாக எண்ணெய் கசிவதை தடுக்க விளக்கினை தண்ணீரில் ஊற வைத்து உலர வைத்த பின் பயன்படுத்த வேண்டும்.
அகல் விளக்குகளை சில மணி நேரம் தண்ணீரில் நனைத்து பின்னர் சுத்தமான துணியால் விளக்குகளை துடைத்து விளக்கு ஏற்றலாம். இதுவும் விளக்கு எண்ணெய் உறிஞ்சாமல் தடுக்கிறது. நீங்கள் விளக்கிற்கு வண்ணம் தீட்ட நினைத்தால் அக்ரிலிக் பெயிண்ட் வைத்து விளக்கிற்கு வண்ணம் தீட்டலாம். இது விளக்கை அழகாக காட்டுவதுடன் எண்ணெய் கசிவதை தடுக்கவும் உதவுகிறது.
அகல் விளக்குகளை சமமான நிலப்பரப்பில் வைக்க வேண்டும். பள்ளம், மேடு போன்ற பகுதிகளில் விளக்குகளை வைக்கும் பொழுது விளக்கு சரிந்து எண்ணெய் கசியத் தொடங்கும். மேலும் விளக்கில் முழு அளவில் எண்ணெய் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். விளக்கின் முக்கால் பாகத்தில் எண்ணெய் ஊற்றுவதால் விளக்கு நீண்ட நேரம் எரிவதுடன் எண்ணெய் கசியாமல் பார்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய அகல் விளக்குகள் இருந்தால் அதனை டிஸு பேப்பர் அல்லது நல்ல துணிகளை வைத்து நன்றாக துடைத்து எடுக்கவும். பின்னர் நாம் பயன்படுத்தும் நெயில் பாலிஷ் கொண்டு அகல் விளக்கை டெக்கரேட் செய்யவும். இது அகல் விளக்கை ரம்மியமாக காட்டுவதுடன் எண்ணெய் கசிவை தடுக்கவும் உதவுகிறது.
இப்படி நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அகல் விளக்கில் எண்ணெய் கசிவதை தடுக்கலாம்.
இந்த எளிய டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் வீட்டு அகல் விளக்குகளை சுத்தம் செய்து விளக்கு ஏற்றுவதுடன் இந்த வருட தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us