மழை காலத்தில் ஃபோனை நனையாமல் காப்பது எப்படி? டிப்ஸ்!!!

ஃபோனில் மழை நீர் இருப்பதாக நீங்கள் கருதினால், அதை போக்க இருக்கவே இருக்கு அரிசி. ஆம், அரிசி ஈரப்பதத்தை உரிஞ்சம் தன்மை கொண்டது.

நாம் எங்கு சென்றாலும் சரி, ஆடை போலவே நம் உடலுடன் ஒட்டிக் கொண்டிருப்பது ஃபோன்களும் தான். அந்த அளவிற்கு மின்சாதன பொருட்களின் பயன்பாடு நமது வாழ்க்கையில் இன்றியமையாதாகி விட்டது. இந்த நிலையில், வெளியில் மழை பெய்கிறது என்பதற்காக, நமது ஃபோனை வீட்டியேலேயே வைத்துவிட்டுச் செல்ல முடியாது அல்லவா. அப்படி இருக்கும் சயமங்களில் நாம் எவ்வாறு மழையில் இருந்து அந்த சாதனங்களை பாதுகாக்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

இது குறித்து ஹமீ இந்தியா ஆன்லைன் வணிக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரதிக் நாயக் என்ன சொல்கிறார் என்பதை பார்க்கலாம்.

மழை பெய்யும் போது நனைந்தாலும் பரவாயில்லை, ஃபோன் நனைந்துவிடக்கூடாது என்பது தான் அனைவரின் எண்ண ஓட்டமாக இருக்கும். அப்போது, நாம் என்ன செய்வோம் என்றால், ஃபோனை பத்திரமாக பின்பாக்கெட்டில் வைத்து பாதுகாக்க முயற்சிப்போம். ஆனால், அப்படி செய்வது சரியானதாக இருக்காது. அப்போது, ஃபோனை ஹேண்ட்பேக்கில் வைத்து பாதுகாத்துக் கொள்வதோடு, மழை நிற்கும் வரை ஃபோன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்தபோதிலும், ஃபோன் சில சமயங்களில் மழையில் ஈரமாகிவிடும் வாய்ப்பிருக்கிறது. அப்போது, அந்த ஃபோனின் பேட்டரி கழற்றி தனியாக வைத்து ஈரத்தை காய வைக்க வேண்பது தான் சிறந்ததாக இருக்கும்.

ஃப்ளூடூத் ஹெட்செட்

ஒரு வேளை நீங்கள் பெரிய பிஸினஸ் மேக்னட்டாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு அதிகமான கால்ஸ் வர வாய்ப்புள்ளது. எப்போதும், ஃபோன் கால்ஸ் வரும் என்றால், ஃப்ளூடூத் ஹெட்செட் வாங்கிக் கொள்ளலாம். மழைகாலங்களில் இது போன்று ஃப்ளூடூத் ஹெட்செட் பயன்படுத்தும்பட்சத்தில், உங்கள் போனை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஈரப்பதத்தை உறிஞ்சும் அரிசி

ஃபோனில் மழை நீர் இருப்பதாக நீங்கள் கருதினால், அதை போக்க இருக்கவே இருக்கு அரிசி. ஆம், அரிசி ஈரப்பதத்தை உரிஞ்சம் தன்மை கொண்டது. எனவே, ஃபோனில் ஏதேனும் ஈரப்பதம் இருப்பது தென்பட்டால், மாசு இல்லாத அரிசியின் உள்ளே உங்களது ஃபோனை வைத்து மூடி விடுங்கள். எவ்வளவு நேரம் அரிசியில் ஃபோன் இருக்கிறதோ, அவ்வளவு ஈரப்பதம் உங்களின் ஃபோனில் இருந்து வெளியேறிவிடும்.

கேஸ் கவர்

ஃபோனில் கேஸ் கவர் இல்லை என்றால், உடனடியாக ஒன்றை வாங்கி போட்டுக் கொள்ளுங்கள். இதனால், உங்கள் ஃபோன் ஸ்கினீன் மழை நீரினால் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சார்ஜ்  போடாதீங்க

மழையில் நனைந்த ஃபோனை உடனடியாக சார்ஜ் செய்வது சில சமங்களில் ஆபத்தானதாக அமையக்கூடும். எனவே, ஃபோன் மழையில் நனைந்து விட்டது என்றால், உடனடியாக அதனை சார்ஜ் செய்யக் கூடாது. ஃபோனில், குறிப்பாக சர்க்யூட்டில் ஈரத்தன்மை முற்றிலும் காய்ந்த பின்னரே சார்ஜ் செய்ய வேண்டும்.

இவ்வாறு மழை நேரங்களில், ஃபோன் மட்டுமல்லாமல் இதர மின்சாதனளான டேட்லட், லேப்டான் போன்றவற்றையும் பாதுகாத்துக் கொள்ளலாமே!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close