கண்ணை சுற்றி வட்ட வட்டமாக கருவளையம்... வெறும் 2 ரூபாய் போதும்; இப்படி ட்ரை பண்ணுங்க!

கண்ணை சுற்றி உள்ள கருவளையத்தை 2 ரூபாய் காபி தூளில் மிக ஈஸியாக எப்படி சரி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கண்ணை சுற்றி உள்ள கருவளையத்தை 2 ரூபாய் காபி தூளில் மிக ஈஸியாக எப்படி சரி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
dark circle

கண்களுக்குக் கீழே உண்டாகும் கருவளையம் (Dark Circles) வெறும் அழகியல் பிரச்சனை மட்டுமல்ல அது உடல் சோர்வு மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகளின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் பொதுவாக இந்த பிரச்சனை உள்ளது. இதனை மறைப்பதற்காக பெண்கள் பல்வேறு அழகு சாதன் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

Advertisment

கருவளையம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள்

கண்களுக்குக் கீழே உள்ள தோல், உடலின் மற்ற பகுதிகளை விட மிகவும் மெல்லியதாகவும் உணர்வுமிக்கதாகவும் இருப்பதால், இங்கு ஏற்படும் மாற்றங்கள் எளிதில் வெளியில் தெரிபவையாக உள்ளது. 
தூக்கமின்மை மற்றும் அதிக வேளுப்பளு காரணமாகும் கருவளையம் ஏற்படலாம். அதாவது, ஒரு நாளைக்கு 8 மணி நேர தூக்கம் என்பது கட்டாயமான ஒன்று. நாம் குறிப்பிட்ட நேரம் வரை தூங்கவில்லை என்றால் அது கண்களுக்கு ஓய்வின்மையை ஏற்படுத்துகிறது.

இதன் மூலம் கருவளையம் வருகிறது. இதே போன்று வேளுப்பளு மற்றும் மன அழுத்தத்தின் போதும் நாமக்கு சரியான தூக்கம் இருக்காது. இதனால் நம் கண்கள் சோர்வடைகிறது. இது கருவளையமாக வெளிப்படுகிறது. தற்போது உள்ள நவீன காலத்தில் மக்கள் கணினி மற்றும் கைபேசியை அதிகம் பயன்படுத்துகின்றனர். கணினி, கைப்பேசி இல்லாமல் உலகமே இயங்காது என்ற அளவிற்கு வந்துவிட்டது.

நாம் தினமும் கணினி மற்றும் கைப்பேசியின் திரைகளை அதிக நேரம் பார்ப்பது கண்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. இதனாலும் கருவளையம் உண்டாகும். இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, மற்றும் சி போன்ற அத்தியாவசியச் சத்துக்கள் உணவில் குறைவாக இருப்பது, இரத்தச் சோகைக்கு வழிவகுத்து, கருவளையத்தை அதிகரிக்கலாம்.

Advertisment
Advertisements

அதிகப்படியான சூரிய ஒளித் தாக்கம் சருமத்தில் மெலனின்  உற்பத்தியைத் தூண்டி, கண்களுக்குக் கீழே உள்ள தோலை கருமையாக்கலாம். சிலருக்கு ஜெனட்டிக் வழியாகும் கருவளையம் ஏற்படும். இதை தவிர மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களாலும் கருவளையம் ஏற்படுகின்றன. இப்படி பல வழிகளில் வரும் கருவளையத்தை இரண்டு ரூபாய் காபி தூள் மூலம் எப்படி சரிசெய்யலாம் என்று பார்ப்போம்.

எளிய டிப்ஸ்

ஒரு பவுலில் காபி தூள், சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் மற்றும் அரை தக்காளி சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையை நம் கருவளையம் மற்றும் உடலில் கருப்பாக இருக்கும் பாகங்களில் அப்ளே செய்து ஒரு 20 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு சுத்தம் செய்து பார்த்தால் நம் கருப்புகள் நீங்கி இருப்பது கண்கூடாக தெரியும். இவற்றை கழுத்து கருப்புகளுக்கும் பயன்படுத்தலாம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: