சும்மா கரு கருன்னு முடி... வெறும் வெங்காய தோல் போதும்; ஊரே மூக்குல விரல் வைப்பாங்க!

அதிகப்படியான முடி உதிர்வை வெறும் வெங்காய தோலை வைத்து எப்படி கட்டுப்படுத்தலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அதிகப்படியான முடி உதிர்வை வெறும் வெங்காய தோலை வைத்து எப்படி கட்டுப்படுத்தலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
HAIR FALL

எல்லோருக்கும் நல்ல நீண்ட, அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும். ஆனால், இந்த நவீன காலக்கடத்தில் ஆரோக்கியமற்ற உடல், தூக்கமின்மை, உணவு பழக்க வழக்கம், நோய் பிரச்சனைகளால் அதிகப்படியான முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்த முடி உதிர்வு பிரச்சனையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உள்ளது. முடி உதிர்வது என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒரு பிரச்னையாகும். 

Advertisment

ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் உதிர்வது இயல்பு. ஆனால், அதற்கு மேல் உதிர்ந்து, முடி அடர்த்தி குறைவது அல்லது திட்டுகளாக முடி கொட்டுவதுதான் பிரச்னையாகக் கருதப்படுகிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்த என்னென்ன டிப்ஸ்கள் எல்லாமோ செய்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல், முடி உதிர்வை கட்டுப்படுத்த மருத்துவர்கள் உதவியையும் நாடி வருகிறோம். ஒரு சிலருக்கு ஜெனட்டிக் வழியாகவும் முடி உதிர்வு இருக்கும். இப்படி பெரும் தலைவலியாக உள்ள முடி உதிர்வை ஒரு வெங்காய தோலை வைத்து எப்படி கட்டுப்படுத்தலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெங்காய தோலை தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைக்கவும் இதனுடன் கருஞ்சீரகம், டீ தூள் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இப்போது இந்த தண்ணீர் கரு கருவென்று இருக்கும். இந்த தண்ணீரை நன்கு வடிகட்டி குளிர வைக்க வேண்டும். இந்த நீரை நீங்கள் நன்றாக ஷாம்பு போட்டு தலைக்கு குளித்த பின்னர் இந்த தண்ணீரை தலைக்கு பயன்படுத்த வேண்டும்.

இந்த தண்ணீரை பயன்படுத்திய பின்னர் சாதாரண தண்ணீர் வைத்து குளிக்கக் கூடாது. இந்த வெங்காய தண்ணீரில் தான் முடி காய வேண்டும். இந்த வெங்காய நீர் தலையில் இருக்கும் பொழுது நமது முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், உதிர்ந்த இடத்தில் முடிகள் வளர உதவி செய்கிறது. இளைநரைகளை தடுக்க உதவுகிறது. முதுநரையை தள்ளிப் போடுகிறது. இத மூலம் நம் முடி கருகருவென்று வளரும்.

Advertisment
Advertisements

நம் முடிக்கு இதுபோன்ற பேக்குகள் பயன்படுத்துவது முடி உதிர்வை கட்டுப்படுத்தி நன்றாக வளர செய்தாலும். நாம் உட்கொள்ளும் உணவும் நமக்கு முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது. நம் அன்றாட உணவில் காய்கறிகள், பழங்கள், புரதங்கள் ஆகியவற்றை அதிகப்படியாக சேர்ப்பதன் மூலம் நம் முடி இன்னும் திடமாகவும் அடத்தியாகவும் வளரும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: