/indian-express-tamil/media/media_files/2025/10/17/sticker-2025-10-17-17-57-10.jpg)
நம் வீட்டில் என்னதான் பாத்திரம் இருந்தாலும் புது பாத்திரங்களை வாங்கி குவிப்பதில் பெண்களுக்கு ஒரு அலாதியான இன்பம் உள்ளது. ஒரு கடைக்கு சென்றால் நம் கண்கள் முதலில் தேடுவது புதிய பாத்திரத்தை தான். தினமும் புதுப்புது பாத்திரங்களில் சமையல் செய்வது என்பது பெண்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கிறது.
ஆனால், புதுப் பாத்திரங்களில் உள்ள ஸ்டிக்கர்களை எப்படி நீக்குவது என்பது நமக்கு இன்னும் சவாலான ஒரு செயலாகவே உள்ளது. பெரும்பாலும் பலர் கரண்டிகள், அல்லது கத்திகளை வைத்து ஸ்டிக்கர்களை நீக்குவார்கள். அப்படி நீக்கும் பொழுது புதிய பாத்திரத்தில் கீறல்கள் விழுந்துவிடும். சிலர் பாத்திரம் கழுவும் ஸ்க்ரப்பர் வைத்து ஸ்டிக்கர்களை நீக்குவார்கள். ஆனாலும், சில ஸ்டிக்கர்கள் முழுமையாக நீங்குவதில்லை.
சிலர் பாத்திரம் கழுவும் பொழுது ஸ்டிக்கர் போய்விடும் என்று அந்த ஸ்டிக்கர் இருக்கும் பாத்திரத்தில் அப்படியே சாப்பிடுவார்கள். அப்படி செய்வது உடலுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். உடலில் பல பிரச்சனைகளையும் ஏற்படும். இப்படி நமக்கு தலைவலியாக உள்ள ஸ்டிக்கரை எப்படி எளிதில் நீக்கலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் ஸ்டிக்கர் நீக்க வேண்டிய பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைக்கவும். பாத்திரம் சூடானதும் கத்தியை கொண்டு அந்த ஸ்டிக்கரை எடுத்தால் வேலை ஈஸியாக முடிந்துவிடும். அப்படியும் ஸ்டிக்கர் முழுமையாக வரவில்லை என்றால் நெயில் பாலிஷ் ரிமூவரை ஒரு காட்டன் பஞ்சில் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.
இதை ஸ்டிக்கர் இருக்கும் பாத்திரத்தில் வைத்து நன்றாக தேய்த்து எடுத்தால் ஸ்டிக்கர் நொடி பொழுதில் காணாமல் போய்விடும். இப்படி செய்யும் பொழுது பாத்திரத்தை நன்கு கழுவி விட்டு பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் நெயில் பாலிஷ் ரிமூவரில் பல ரசாயன பொருட்கள் கலந்திருக்கும். அதை பாத்திரத்தில் உபயோகித்துவிட்டு அப்படியே அந்த பாத்திரத்தில் சாப்பிடும் பொழுது உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.
அதனால், நெயில் பாலிஷ் ரிமூவர் பயன்படுத்திய பாத்திரத்தை நன்கு கழுவி விட்டு அதன் பின் அன்றாட வேலைக்கு பயன்படுத்துங்கள். இப்படி ஈஸியான வழிகள் மூலம் ஸ்டிக்கரை இனி சுலபமாக நீக்கிவிடலாம். இதை நீங்களும் வீட்டில் ட்ரை செய்து மிக சுலபமாக பாத்திரத்தில் உள்ள ஸ்டிக்கர்களை நீக்குங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.