விஜய் கையில் இருக்கும் இந்த சீரியல் பிரபலம் யாருன்னு தெரியுமா?

விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் நடிக்கிறார்.

விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் நடிக்கிறார்.

author-image
abhisudha
New Update
vijay

Do you know this famous TV Celebrity?

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலில், சகானா’வாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹிமா பிந்து. இப்போது சன் டிவியின் இலக்கியா சீரியலில் நடித்து வருகிறார்.

Advertisment

ஹிமா பிந்து ஆந்திராவை சேர்ந்தவர். தாத்தா, பாட்டி, அப்பா என அனைவருமே சினிமாவில் பிரபலமானவர்கள் என்பதால் இவருக்கு இயல்பாகவே நடிப்பு மீது என்பதால் ஆர்வம் வந்துவிட்டது.

சீரியலில் பிஸியாக நடிக்கும் ஹிமா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். புடவை, சுடிதார், வெஸ்டர்ன் டிரெஸ் என விதவிதமாக உடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை ஹிமா அடிக்கடி தன் இன்ஸ்டாவில் பகிர்வார்.

publive-image
Advertisment
Advertisements

அப்படி முன்னதாக ஹிமா பிந்து பகிர்ந்த ஒரு போட்டோ, இப்போது பலரையும் கவர்ந்துள்ளது. அதற்கு காரணம், அந்த போட்டோவில் நடிகர் விஜய், ஹிமா பிந்துவை கையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு இவரது வீட்டின் பக்கத்தில் தான் நடந்துள்ளது. அப்போது தான் விஜய் அங்கிளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக ஹிமா பிந்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

இதோ அந்த போட்டோ!

விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் நடிக்கிறார். இதில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்ப கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: