காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்வனத்தில் அமைந்துள்ள குற்றாலம் நீர்வீழ்ச்சியில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், கோடை விடுமுறை உள்ளிட்ட நாட்களில், வழக்கத்தை விட, சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகம் காணப்படும்.
இந்நிலையில் காணும் பொங்கல் தினம் என்பதால் காலை, 9:00 மணி முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. பெரும்பாலானோர் குடும்பமாக வந்திருந்தனர்.
அவர்கள் பொங்கி விழுந்த நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் எடுத்து வந்திருந்த உணவை கூட்டாக உண்டு மகிழ்ந்தனர். இதனால் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, முகப்பு பகுதிகள் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
சிலர் நீர் வீழ்ச்சியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் வனத்துறை ஊழியர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/