Advertisment

ரயில் பயணிகள் தூங்கும் நேரம்... புதிய விதிமுறை வெளியிட்ட ஐ.ஆர்.சி.டி.சி

ரயிலில் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரவில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பது, போன் பேசுவது போன்றவற்றை செய்யக் கூடாது என ஐஆர்சிடிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

author-image
sangavi ramasamy
New Update
How to change the boarding station in IRCTC tamil

ரயிலில் தினமும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். குறிப்பாக வெளியூர் செல்ல நீண்ட தூரம் பயணம் செய்ய ரயில் போக்குவரத்தை தேர்தெடுக்கின்றனர். ஏனெனில் மற்ற சேவைகளை விட ரயில் சேவை கட்டணம் குறைவு. அனைத்து வசதிகளும் அதில் உள்ளது. பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப ஏசி பெட்டி, நான்-ஏசி பெட்டி, படுக்கை வசதி என தேர்ந்தெடுத்து பயணிக்கின்றனர்.

Advertisment

இருப்பினும் சில நேரங்களில் இடையூறு ஏற்படுகிறது. மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரவில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பது, போன் பேசுவது, லைட் ஆன் செய்து வைத்திருப்பது எனப் பல இடையூறுகளை சந்தித்து பயணம் மேற்கொண்டிருப்போம். இதுகுறித்து ஐஆர்சிடிசி நிர்வாகத்திற்கு பல புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது, ஐஆர்சிடிசி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இரவில் நேரத்தில் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பது, போன் பேசுவது கூடாது. இரவு 10 மணிக்கு மேல் பெட்டியில் விளக்கை எரியவிடக் கூடாது. பயணிகளின் தூக்கத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது என புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிவிப்புகளை மீறி யாரேனும் நடந்தால் அவர்கள் மீது ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். அறிவிப்புகளை மீறி இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment