Advertisment

நம்ப முடியாத வெயிட் லாஸ்.. கோலிவுட்டில் கால் பதிக்க தயாராகும் ரோபோ சங்கர் மகள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indraja shankar age robo shankar daughter

indraja shankar age robo shankar daughter

indraja shankar age robo shankar daughter : நடிகர் ரோபோ ஷங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மனைவி பிரியங்கா குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு? போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பரிச்சையமானவர்.

Advertisment

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மைப்படுத்தி வெளியானது. அட்லீ இயக்கியிருந்த இப்படத்தின் நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் பெண்கள் கால்பந்து குழுவில் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகன் இந்திரஜா பாண்டியம்மா ரோலில் நடித்திருந்தார்.

பிகில் படத்தின் ஒரு காட்சியில் பெண்கள் அணியினர் சரியாக விளையாடததால் அவர்களை விஜய் திட்டுவது போல் காட்சி இடம்பெற்றிருந்தது. அதில் பாண்டியம்மா இந்திரஜாவை விஜய் குண்டம்மா…. குண்டம்மா என திட்டுவார் இதனாலே படத்தில் நடித்த மற்ற பெண்களை விட இந்திரஜா பெரிய அளவில் பிரபலமானார்.இதையடுத்து அவரது அப்பா ரோபோ சங்கர் போலவே இந்திராஜாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியது. கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிக்க வைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது மேக்கப் போட்டு ஆள் அடையாளமே தெரியாத வகையில் டோட்டலாக சேஞ் ஆகியுள்ளார்.

விஜய் பட பாடலின் இசைக்கு நடிகர் ரோபோ ஷங்கரும் இந்திரஜாவும் லுங்கி கட்டிக்கொண்டு சேர்ந்து ஒரு மாஸ் லுங்கி டான்ஸ் ஆடி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.பிகில் பாண்டியம்மாள் தனது உடல் எடையை வெகுவாக குறைக்க முயற்சித்து வரும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment