ஹெல்த் இன்சூரன்ஸ்: அவசியம் புரிஞ்சுருப்பீங்க… எப்படி தேர்வு செய்வது?

Insurance News In Tamil: ஒரு சூப்பர் டாப் உங்கள் அடிப்படை திட்டத்திற்கு மிகக் குறைந்த பிரீமியத்தில் காப்பீடு செய்யப்பட்ட ஒரு பெரிய தொகையைச் சேர்க்கிறது.

By: Published: March 27, 2020, 8:58:29 PM

Health Insurance Schemes: உலகம் முழுவதும் இன்று கொரோனா வைரஸ் நெருக்கடியால் சூழப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனமும் (World Health Organisation) பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ள இந்நோயயை தொற்று நோய் (pandemic) என்று அறிவித்துள்ளது. உலகமுழுவதும் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப வருடங்களில் மனித இனம் Ebola, SARS, MERS, மற்றும் தற்போது COVID -19 போன்ற கொடிய தொற்று நோய்களை கண்டுள்ளது. அரசு மற்றும் நிர்வாகங்கள் தேவையான தடுப்பு மற்றும் குணப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இந்த நோயயை தடுப்பதற்காக ஒவ்வொரு தனிநபரும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. அதே சமயம் எந்தவொரு மோசமான சூழ்நிலையை சந்திக்கவும் தயாராகிக் கொள்ள வேண்டியதும் அவசியம்.


உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் சிறப்பாக பாதுகாக்க மற்றும் ஏதேனும் எதிர்பாராத மருத்துவ தேவையை எதிர்கொள்ள போதுமான மருத்துவ காப்பீட்டை வாங்குவது மிக முக்கியமானது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும், உங்கள் பெற்றோருக்கும் மருத்துவ காப்பீடு பெறுவதோடு ரூபாய் 50,000/- வரை வரி சலுகை பெறவும் இது உதவும். மருத்துவ காப்பீட்டை மார்ச் 31 க்கு முன்பே எடுத்திருந்தால் வரி சலுகையை இந்த நிதியாண்டே பெறலாம். ஒரு மருத்துவ காப்பீட்டை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

1. மருத்துவ காப்பீட்டை விரைவில் வாங்குங்கள்

கோவிட் -19 போன்ற நோய்களை இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளடக்கினாலும், முதல் 30 நாட்களில் காப்பீடு தொகையை திரும்ப்ப பெறுவது என்பது பெரும்பாலும் விலக்காகும். மனிதநேயம் நோய்களால் மறைக்கப்படும் தற்போதைய உலகச் சூழலில், ஒருவருக்கு அது தேவைப்படும் போது, எல்லா அம்சங்களும் உள்ள மருத்துவ காப்பீட்டை விரைவாக எடுப்பது மிக முக்கியம்.

பெரும்பாலும் பெயரளவுக்கான காப்பீடாக இருப்பதால், வேலை செய்யும் நிறுவனங்களில் தரப்படும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் போதுமானதாக இருக்காது. மேலும் அவற்றில் அறை மற்றும் ICU வாடகை ஆகியவை பெரும்பாலும் உள்ளடக்கியிருக்காது. தனிப்பட்ட மருத்துவ காப்பீட்டு தான் உங்களுக்கு தேவையானவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

2)அதன் அம்சங்களை பொருத்து மருத்துவ காப்பீடை தேர்ந்தெடுங்கள்

வெவ்வேறு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் வெவ்வேறு அம்சங்களை தரும். எனவே ஒருவருடைய குறிப்பிட்ட மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

3) Add a Super-top up plan

உங்களுடைய அடிப்படைத் திட்டத்தில் ஒரு சூப்பர் டாப் உங்கள் அடிப்படை திட்டத்திற்கு மிகக் குறைந்த பிரீமியத்தில் காப்பீடு செய்யப்பட்ட ஒரு பெரிய தொகையைச் சேர்க்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Insurance news in tamil best health insurance schemes corona outbreak

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X