ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 24 அன்று சர்வதேச சுய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. தேதியில் 7/24 என்ற தனித்துவம் உள்ளது, இது வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் சுய-கவனிப்பு வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
இந்த நாள் நம்மை நாமே நேசிப்பதற்கும், நம் உடலையும் மனதையும் கவனித்துக்கொள்வதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் சீரியல் நடிகை கவிதா சோலைராஜா ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய சுய பராமரிப்பு குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
என்னோட பிரிட்ஜில எப்போவும் ஐஸ் கியூப்ஸ் இருக்கும். ஃபிரெஷ் கற்றாழை எடுத்து, ஐஸ் டிரேயில ஊத்தி வச்சுடுவேன். காலையில எழுந்த உடனே, ஓரே ஒரு கியூப்ஸ் எடுத்து முகம் முழுவதும் மசாஜ் பண்ணினா, ரத்த ஓட்டம் நல்ல இருக்கும். டார்கிள் சர்கிள்ஸ் வராம இருக்கறதுக்கு, கண்ணுக்கு கீழே ஆரம்பிக்கணும். இதுதான் காலை எழுந்த உடனே பண்றது.
அப்புறம் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு, டோனர், மாய்ஸ்சரைசர் சன்ஸ்கிரீன் எல்லாம் போடுவேன்.
அதேபோல, இரவு ஷூட் முடிச்சுட்டு வந்து கொஞ்சம் நேரம் இருக்குனா, மேக்கப் ரிமூவ் பண்ண அப்புறம், உருளைக்கிழங்கு, தக்காளி ஏதாவது ஐஸ் கியூப்ஸ் பண்ணி வச்சுருப்பேன். அதை எடுத்து முகத்துக்கு மசாஜ் பண்ணுனா ஸ்கின் நல்ல சாஃப்டா இருக்கும். அதுக்கு பிறகு எப்போவும் போல, டோனர், மாய்ஸ்சரைசர் எல்லாம் போடுவேன்.
நைட்டுக்கு நானே ஒரு கிரீம் ரெடி பண்ணி வச்சுருக்கேன்.
பாதாம் எண்ணெய், கிளீசரின், ரோஸ் வாட்டர், கற்றாழை ஜெல், இது நான்குமே சம அளவு எடுத்து, நல்லா மிக்ஸ் பண்ணி வச்சுடுவேன். அது ஒரு வாரத்துக்கு வரும். நைட் மாய்ஸ்சரைசர் எல்லாம் போட்டதுக்கு அப்புறம் அதுக்கு மேல இந்த கிரீம் அப்ளை பண்ணிட்டு தூங்கிடுவேன்.
உண்மைய சொல்லனும்னா நான் இதுவரைக்கும் எந்த ஃபேஸ் மாஸ்க்கும் கடையில வாங்குனதில்ல..
நாம என்ன சாப்பிடுறமோ அதை சருமத்துக்கும் அப்ளை பண்ணலாம். அரிசி மாவு, கடலை மாவு, கோதுமை மாவு, அதுல தயிர் இல்ல பால், மஞ்சள் எல்லாமே நான் முகத்துக்கும் போடுவேன்.
அரிசி மாவு, தயிர், தேன் மிக்ஸ் பண்ணி ஃபேஸ் மாஸ்க் போடுவேன்.
அரிசி மாவு கொரகொரப்பா இருக்கிறதால நல்ல ஸ்கிரப் பண்ணும்.. தயிர், தேன் மாய்ஸ்சரைசர் கொடுக்கும், இப்படி பல விஷயங்களை கவிதா, ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.