சிறுதானிய வகைகளில் எது அதிக புரத சத்து உள்ளது என்ற கேள்வி எழும். இந்நிலையில் பாக்ஸ்டெயில் மில்லட் என்று அழைக்கப்படும் தினை அரிசியில் அதிக புரத சத்து உள்ளது.
குறிப்பாக இது உடலில் சதைகளை வலுவாக்க, உடல் எடை குறைய உதவும். 100 கிராம் தினை அரிசியில் 12.3 கிராம் புரத சத்து, இதுபோல 100 கிராம் கம்பில் 10.9 கிராம் புரத சத்து , சிறு தானியத்தில் 10.1 கிராம் புரத சத்து, சோளத்தில் 9.9 கிராம், ப்ரோசோ மில்லட்டில் 8.3 கிராம், கிடோ மில்லட்டில் 8 கிராம் புரத சத்து உள்ளது.
ராகியில் 7.1 கிராம், குதிரைவாளி 6.2 கிராம் புரத சத்து உள்ளது. இந்நிலையில் நீங்கள் சிறுதானியத்தை புரத சத்து வேண்டும் என்றால் உங்கள் சமையலில் பயன்படுத்த வேண்டும்.
நாம் புரத சத்து உள்ள உணவு என்று வந்தால், முட்டை , பீன்ஸ், மாமிசம், பால் என்பதைதான் தேர்வு செய்வோம். ஆனால் சிறு தானிய வகைகளை தேர்வு செய்யவில்லை.
எல்லா சிறுதானியத்தில் 8 முதல் 20 சதவிகிதம் பிரத சத்து மற்றும் பேட்டி ஆசிட் உள்ளது. குறிப்பாக இதை சுகர் நோயாளிகள் எடுத்துகொள்ளலாம். இது கொலஸ்ட்ராலை குறைக்கும். மேலும் குறைந்த விலையில் மான்கனிஸ் கால்சியம், இரும்பு சத்து உள்ளது. அசிடிட்டி மற்றும் வயிற்று எரிச்சல் இருக்கும் நபர்களுக்கு இது மிகவும் மருந்து போல் செயல்பட்டு குணப்படுத்தும். சிறந்த அளவில் புரத சத்து இருப்பதால், இது இரும்பு சத்தை எடுத்துகொள்ள உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“