Advertisment

குயிலுக்கே குயில் பாட்டா! ஐக்கி பெர்ரி நியூ வைரல் ஆல்பம் எப்படி இருக்கு?

பிக்பாஸ் புகழ் ஐக்கி பெர்ரி புதிதாக பாடிய ’ தலையாட்டி பொம்மை’ சாங் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
abhisudha
Sep 27, 2022 13:19 IST
Iykki berry

Iykki berry

தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்து ஐக்கி, அங்குள்ள மகரிஷி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்.

Advertisment

ஐக்கி, ஜனவரி 2020-இல், தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார். ’மீ சின்ஸ் 1991’ என பெயரிடப்பட்ட அந்த ஆல்பம்’ பிரேவ், ஜீலஸி, ஹியூமர் பாலிசி, சியஸ்டர் பாலிசி என மொத்தம் ஒன்பது பாடல்களை கொண்டிருந்தது.

அதிலிருந்து கானா, ஹங்காமா, ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், ஜியோசாவன் மற்றும் பிறவற்றில் ஐக்கியின் பாடல்கள் எப்போதும் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.

ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பிறகுதான் ஐக்கி’ வெளிச்சத்துக்கு வந்தார். ஆரம்பத்தில் ஐக்கியை பார்த்த பலரும் ஏதோ வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என நினைத்தனர். ஆனால், அவருக்கு தஞ்சாவூர் என்பது தெரியவந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் திகைத்து விட்டனர். அப்படி ஐக்கி தோற்றத்திலும், நடையிலும் பார்க்க தமிழ்ப்பெண்ணை போல இல்லாமல் பயங்கர மாடர்ன் லுக்கில் இருந்தார்.

இப்போது ஐக்கி, ஆல்பம் பாடல்கள், இசை நிகழ்ச்சி என பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த பிபி ஜோடிகள் சீசன் 2வில், ஐக்கி தனது காதலன் தேவ் மேஜருடன் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்நிலையில், ஐக்கி பெர்ரி புதிதாக பாடிய ’தலையாட்டி பொம்மை பாடல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவ் மேஜர் இசையில், ஐக்கி மற்றும் சின்னபொண்ணு சேர்ந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.  யூடியூபில் இதுவரை 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த பாடலை கேட்டுள்ளனர்.

ஐக்கியின் இந்த பாடலை தான் இப்போது பலரும் ரீல்ஸ் செய்து, வெளியிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment