விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு சீசனுமே எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற தவறுதில்லை. குறிப்பாக வார நாட்களில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதே பார்க்கவே தமிழகத்தில் ஒரு பெருங்கூட்டமே உள்ளது.
Advertisment
முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சி, அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல், பல பல யூடியூபர்களுக்கும், மீம் கிரியேட்டர்களுக்கும் இலவசமாக கன்டென்ட் கொடுத்து அவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தி வருகிறது. அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 6, அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. அதில் தனது கொஞ்சும் இலங்கைத் தமிழால் ஆரம்பத்திலே பல ரசிகர்களை கவர்ந்தவர் ஜனனி குணசீலன்.
இலங்கையின் ஜாஃப்னா மகாணத்தில் பிறந்த ஜனனிக்கு இப்போது 21 வயது ஆகிறது. சிறிய வயதில் இருந்தே ஜனனிக்கு சினிமா மீது ஆசை. கல்லூரி படிப்பை முடித்த பிறகு, சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளார். ஆனால் கிடைக்கவில்லை. பிறகு, ஊடகத் துறையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி உள்ளார்.
இலங்கையின் ஐபிசி தமிழ் டிவி சேனலின் உணவு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பல நிகழ்ச்சிகளை ஜனனி தொகுத்து வழங்கினார். ஸ்ரீலங்கா, கேபிடல் டிவியில் விஜே ஆகவும் இருந்திருக்கிறார். மாடலிங் மீது ஆர்வம் கொண்ட ஜனனி, இதுவரை 10-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்து உள்ளார்.
ஜனனிக்கு பாரம்பரிய உடை அணிவது பிடிக்கும். அதேபோல் கிளாசிக்கல் டான்சிலும் இவருக்கு அதீத விருப்பம். இப்படி மல்டி டேலண்டட் ஆக இருக்கும் ஜனனி ஒரு யூடியூபர், வளர்ந்து வரும் இன்ஃபுளூயன்சரும் கூட.