பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படும் கிருஷ்ணரின் பிறப்பைக் குறிக்கிறது. பத்ரபாத்தின் ஷ்ரவண மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் எட்டாவது நாளில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 19 அன்று உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் கோலகலமாக கொண்டாடப்படுகிறது.
முகூர்த்தம்
வேத பஞ்சாங்கத்தின்படி, இந்த ஆண்டு அஷ்டமி திதி ஆகஸ்ட் 18 அன்று இரவு 9:21 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 19, 2022 அன்று இரவு 10:59 மணிக்கு முடிவடையும், எனவே ஜெயந்தி இரண்டு நாட்களிலும் கொண்டாடலாம்.
கிருஷ்ண ஜெயந்தி முக்கியத்துவம்
கிருஷ்ணர் உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவில் தேவகி மற்றும் வாசுதேவ் ஆகியோருக்கு மகனாக பிறந்தார், ஆனால், அவரது தாய் மாமன் கன்சாவால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
கிருஷ்ணன் பிறந்தபோது, மதுராவை அவனது மாமா, கன்சா ஆட்சி செய்தான், அப்போது தீர்க்கதரிசி, அந்தத் தம்பதியரின் 8வது மகன் கன்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருப்பான் என்று சொன்னார். இதனால் கன்சா, தன் சகோதரியின் குழந்தைகளைக் கொல்ல நினைத்தான்.
கன்சா’ தேவகி மற்றும் வசுதேவரை சிறையில் அடைத்து அவர்களின் முதல் ஆறு குழந்தைகளைக் கொன்றார்.
இருப்பினும், அவர்களின் ஏழாவது குழந்தையான பல்ராம் பிறந்த நேரத்தில், தேவகியின் வயிற்றில் இருந்த கரு’ இளவரசி ரோகிணிக்கு மாயமாக மாற்றப்பட்டது. அவர்களின் 8வது குழந்தையான கிருஷ்ணன் பிறந்ததும், அரண்மனை முழுவதும் உறக்கத்தில் மூழ்கியது
கிருஷ்ணர் பிறந்ததை அடுத்து, ஒரு நிலவறையில் அடைக்கப்பட்டிருந்த வாசுதேவா – குழந்தையை யமுனை ஆற்றின் குறுக்கே ஒரு கூடையில் சுமந்து கோகுலம் வரை சென்று, பிருந்தாவனில் உள்ள நந்தா மற்றும் யசோதா வீட்டில் சேர்த்தார். அங்குதான் கிருஷணன் வளர்ந்தார்.
பிறகு வாசுதேவன் ஒரு பெண் குழந்தையுடன் அரண்மனைக்குத் திரும்பி அவளை கன்சாவிடம் ஒப்படைத்தார். தீய அரசன் குழந்தையைக் கொல்ல முயன்றபோது, அவள் துர்காவாக மாறி, அவனது வரவிருக்கும் அழிவைப் பற்றி எச்சரித்தாள்.
இப்படி பிருந்தாவனில் வளர்ந்த கிருஷ்ணர், பின்னர் அவரது மாமா கன்சாவைக் கொன்றார்.
துவாபர யுகத்தின் போது, தர்மத்தின் செய்தியை மனித குலத்திற்கு பரப்பவும், அதர்மம் மற்றும் தீமைகளை அழிக்கவும் கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார்.
கிருஷ்ணர் சிறுவயதில் மிகவும் குறும்புக்காரர். வெண்ணெய் திருடுவதில் பிரபலமானவர். இளமையில் பல அசுரர்களைக் கொன்றார்.

இந்த புனித நாளில், மக்கள் அதிகாலையில் குளித்து, பக்தி பாடல்கள் பாடி, மந்திரங்களை உச்சரித்து, நடனமாடி கிருஷ்ணரை வணங்குகிறார்கள். மேலும், குழந்தை கிருஷ்ணரின் சிலைகளை கழுவி, புத்தாடை அணிவித்து, தொட்டிலில் வைப்பார்கள்.
கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் பக்தர்கள் பல்வேறு உணவுகள் மற்றும் இனிப்புகளை தயார் செய்கின்றனர். அனைத்து கிருஷ்ணர் கோவில்களிலும், கிருஷ்ணருக்கு 56 வகையான நைவேத்தியங்கள் வழங்கப்படுகிறது. பகவான் கிருஷ்ணர் நள்ளிரவில் வந்து தனது பக்தர்கள் செய்யும் நைவேத்தியங்கள் பிரசாதத்தை உட்கொள்வார் என்பது மிகவும் வலுவான நம்பிக்கை.
கிருஷ்ண ஜெயந்தி அன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம்
*அச்யுதம் கேஷ்வம் கிருஷ்ணா தாமோதரம் ராம நாராயணம் ஜாங்கி வல்லபம்..!!
*ஸ்ரீ கிருஷ்ணா கோவிந்த ஹரே முராரி ஹே நாத் நாராயண வாசுதேவா..!!
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே..!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“