Advertisment

பி.இ, பி.டெக், ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் பணி!

டிரேடு அப்ரென்டிஸ் சார்ந்த ஐ.டி.ஐ., பிட்டர் எலக்ட்ரீசியனில் தலா 8, டெக்னிக்கல் அப்ரென்டிஸ் சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தலா 2, என பல பணிகள் உள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பி.இ, பி.டெக், ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் பணி!

எச்.எல்.எல்., லைப்கேர் (HLL Lifecare Limited) என்பது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாடில் இயங்கும் ஒரு மினி ரத்னா நிறுவனம். உடல் நலன் குறித்த பல்வேறு பொருட்களைத் தயாரிப்பதில் இந்நிறுவனம் ஈடுபடுகிறது. இங்கு காலியாக இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி., டிரெய்னி, டிரேடு அப்ரென்டிஸ், டெக்னிக்கல் அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisment

காலியிட விபரம்: டிரேடு அப்ரென்டிஸ் சார்ந்த ஐ.டி.ஐ., பிட்டர் எலக்ட்ரீசியனில் தலா 8, டெக்னிக்கல் அப்ரென்டிஸ் சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தலா 2, இதே பிரிவிலான எலக்ட்ரிக்கலில் தலா 2, எலக்ட்ரிக்கல் அண்டு கம்யூனிகேஷனில் 1, டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 4, டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் இன்ஜினிரிங்கில் 2ம் சேர்த்து பல இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பதவியைப் பொறுத்து கல்வி தகுதி மாறுபடும். முழுமையான விபரங்களை அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Sr. Vice President (O),Hll Lifecare Limited, Kanagala - 591 225

விண்ணப்பிக்க கடைசி நாள் : 2017 டிச., 26.

மேலும் விபரங்களுக்கு : http://www.lifecarehll.com/careers எனும் தளத்தைப் பார்க்கவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment