Advertisment

15 நாட்களுக்கு முன்பே கஜ புயல் வருவதை கண்டுப்பிடித்த பள்ளி ஆசிரியர்..எஸ்எம்எஸ் மூலம் மக்களை பாதுகாக்க எடுத்த முயற்சிகள்!

எனக்கு இன்னும் ஞாபக இருக்கிறது. 1996-ம் ஆண்டு நான் கணித்தப்படியே புயல் வந்தது.

author-image
sreeja
புதுப்பிக்கப்பட்டது
New Update
15 நாட்களுக்கு முன்பே கஜ புயல் வருவதை கண்டுப்பிடித்த பள்ளி ஆசிரியர்..எஸ்எம்எஸ் மூலம் மக்களை பாதுகாக்க எடுத்த முயற்சிகள்!

கஜ புயல்.. தமிழகத்திற்கு கற்று தந்த பாடங்கள் ஏராளம். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். ஆரம்பத்தில் கஜ இலங்கையில் மையம் கொண்டுள்ளது என அறிவிப்பு வெளியானது. இது நமக்கு இல்லைப்பா என்ற வசனம் தான் அதிகம் வந்தது.

Advertisment

பின்பு, புயல் கொஞ்சம் கொஞ்சமாக தனது திசையை திருப்பி தமிழகத்தின் பக்கம் திரும்பியபோது பெருசா எதும் நடக்காதுப்பா என்றார்கள். ஆனால் கஜ கணித்ததை விட பலமடங்கு வீரியத்தை காட்டியது. கஜ தனது சுயரூபத்தை வெளியில் காட்டிய அந்த 2மணி நேரம் வானிலை மைய அதிகாரிகளே திகைத்தனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்கள் இதுவரை அந்த பகுதி மக்கள் கண்டிடாத ஒன்று. டெல்டா மாவட்டங்கள் வெள்ள காடானது தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.ஆடு மாடுகளை இழந்த சோகங்கள் ஒருபக்கம் என்றால், உறவினர்களின் உயிர் பலி ஒருபுறம் இதற்கு நடுவில் சொந்த வீடுகளை இழந்து, பசியில் தவிக்கும் அவலம் மற்றொரு புறம். இந்த அனைத்து இழப்புகளையும் அரசு நினைத்திருந்தால் முன்பே தவிர்த்திருக்கலாம் என்ற விவாதம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளி ஆசிரியர் ஒருவர், எத்தனோயோ உயிர்களை காப்பாற்றிய காரணத்திற்காக அனைத்து பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். யார் அவர்?

ஆசிரியர் செல்வக்குமார்

பள்ளி ஆசிரியர் செல்வக்குமார்:

கஜ புயல் தொடக்கத்தில் கடலூர் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றது இந்திய வானிலை மையம். ஆனால் கஜ புயல் கண்டிப்பாக வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என்பதை அடித்து கூறினார் செல்வக்குமார். அதே போல் கஜ புயல் எப்படி இருக்கும்? யாருக்கெல்லாம் ஆபத்து? எப்படி தப்பிக்கலாம்? என்பதை 15 நாட்களுக்கு முன்பே சரியாக கணித்து கூறி இன்று ஒட்டுமொத்த மக்களின் பாராட்டுக்களுக்கும் சொந்தக்காராக நிற்கிறார்.

புயல் இப்படி தான்.. மக்களே தயவுசெய்து உஷார் என்று தொடர்ந்து 4நாட்கள் தனது பகுதி மக்களை எச்சரித்து வந்தார் செல்வக்குமார். அவரின் கணிப்பை நம்மிய பலர் இன்று பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்காமல் பாதுகாப்பாக இருக்கிறார்கள். தங்களது நன்றியை செல்வக்குமாருக்கு சொல்கிறார்கள்.

மன்னார்குடியை சேர்ந்த செல்வகுமார் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வ அடிப்படையில் வானிலையை கணித்து கூறி வருகிறார். இதுமட்டுமில்லை மீனவர்கள், பொதுமக்களின் உயிர்களை காக்க செல்வக்குமார் எடுத்து வரும் முயற்சிகள் ஏராளம். அதில் சிலவற்றை அவரே பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியாகவும் அளித்துள்ளார்.

”மாணவப்பருவத்திலேயே எனக்கு வானிலை தொடர்பான செய்திகள் மற்றும் வானிலை செயற்கைகோள்களை பற்றி தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. 1996-ம் ஆண்டு நான் கணித்தப்படியே புயல் வந்தது. புயல் தாக்கத்தினால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். அதன் பிறகு என்னுடைய வானிலை நிலவரத்தை அவர்களே வந்து கேட்டறிந்தனர்.

எனது கணிப்பு தவறாது என்று அவர்களுக்கு என் மீது அளாதியான நம்பிக்கை. 2000 ஆம் ஆண்டில் தான் எனக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. அதன் பின்பு வானிலை நிலவரத்தை கணிப்பதை விடவில்லை. தொடர்ந்து செய்தேன். என்னை நம்பி இருந்த மீனவர்களுக்காக.

முன்பு செல்போன் மூலம் வானிலை தகவலை பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன். இப்போது வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் வழியாக தகவல்களை பகிர்ந்து வருகிறேன். நம்ம உழவன் செயலியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதன் மூலம் தான் இந்த பணியை செய்து வருகிறேன்.

கஜ புயல் வேதாரண்யம் அருகேதான் புயல் கரையை கடக்கும் என்று நான் தீர்மானித்தது இப்படி தான். ஓமன் மற்றும் மேற்கு வங்கம் அருகே நிலவிய எதிர் புயல்களின் செயல்பாடுகளுடன் கஜ புயலை ஒப்பிட்டு பார்த்தேன்.” என்று கூறியுள்ளார்.

நன்றி: தி இந்து

Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment