ஒரு முறை கல்யாண வீட்டு ஊறுகாய், இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கிலோ பெரிய வெங்காயம்
1 கிலோ தக்காளி
50 கிராம் இஞ்சி
200 எண்ணெய் ( சன்பிளவர் ஆயில்)
1 ஸ்பூன் கடுகு – உளுந்தம் பருப்பு
1 கொத்து கருவேப்பிலை
1 கொத்து மல்லி நறுக்கியது
10 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் உப்பு
மிளகாய் தூள் 25 கிராம்
50 கிராம் புளி
200 எம்.எல் நல்லெண்ணை
நாட்டுச் சக்கரை – 3 ஸ்பூன்
செய்முறை : வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும். இதுபோல தக்காளியை நன்றாக நறுக்க வேண்டும். தொடர்ந்து இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்க வேண்டும். பச்சை மிளகாய் வட்ட வட்டமாக வெட்ட வேண்டும். கொத்தமல்லி நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு சேர்த்து கிளரவும். நறுக்கிய வெங்காயம் நறுக்கிதை சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். தக்காளியை சேர்த்து நன்றாக கிளர வேண்டும் . மூடி போட்டு மூடிவைக்கவும். நன்றாக வெந்ததும், புளி கரைத்ததை சேர்த்து கிளரவும். தொடர்ந்து கிளரவும். மிளகாய் தூள் சேர்க்கவும். நன்றாக கிளரவும். தொடர்ந்து நாட்டுச் சக்கரை சேர்த்து கிளரவும்.