எனக்கு அனைத்தையும் தந்த ஹீரோவுக்கு… கண்மனி எமோஷனல்

கண்மனி மனோகரன் இப்போது ஜீ தமிழ் டிவியில் ’அமுதாவும், அன்னலட்சுமியும்’ சீரியலில் நடிக்கிறார்.

கண்மனி மனோகரன் இப்போது ஜீ தமிழ் டிவியில் ’அமுதாவும், அன்னலட்சுமியும்’ சீரியலில் நடிக்கிறார்.

author-image
abhisudha
New Update
Kanmani Manoharan

Kanmani Manoharan

கண்மனி மனோகரன் இப்போது ஜீ தமிழ் டிவியில் ’அமுதாவும், அன்னலட்சுமியும்’ சீரியலில் நடிக்கிறார். இதில், செந்தில் கதாப்பாத்திரத்தில் அருண் பத்மநாபன் நடிக்கிறார். செந்தில் அம்மா அன்னலட்சுமி, கதாபாத்திரத்தில் கருத்தம்மா ராஜஸ்ரீ நடிக்கிறார்.

Advertisment

சீரியலில் பிஸியாக நடிக்கும் கண்மனி, இன்ஸ்டாகிராமிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இன்ஸ்டாவில் மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்மனியை பின்தொடர்கின்றனர். அதில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

அப்படி கண்மனி பகிர்ந்த ஒரு இன்ஸ்டா பதிவு இப்போது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

Advertisment
Advertisements

தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு, கண்மனி சர்பிரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளார். அப்போது எடுத்த வீடியோவை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்த கண்மனி அதில், “எனக்கு அனைத்தையும் தந்த ஹீரோவுக்கு, எதுவாக இருந்தாலும் என் பக்கம் இருந்தற்கு... நான் செய்யும் அனைத்திலும் எனக்கு ஆதரவு கொடுதத்தற்கு...

நான் அவருக்குத் திருப்பித் தரக்கூடிய ஒரே விஷயம் எனது நிபந்தனையற்ற அன்பை மட்டுமே, அவரிடமிருந்து நான் பெற்ற மிகவும் மதிப்புமிக்க பொருள் இது!

அவரது 60வது பிறந்தநாளை எனது அன்புக்குரியவர்கள் அனைவருடனும் கொண்டாடுகிறேன்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா ❤

உங்களை பெருமைப்படுத்த நான் எப்போதும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், இவ்வாறு கண்மனி உணர்ச்சி பொங்க அதில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ இங்கே!

இதைப் பார்த்த ரசிகர்கள் கண்மனியின் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: