கொஞ்சம் மாடல்; கொஞ்சம் ஹோம்லி! கண்மனி மனோகரன் டிரெஸ் கலெக்ஷ்ன்ஸ்
சீரியலில் பிஸியாக நடிக்கும் கண்மனி, இன்ஸ்டாகிராமிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரின் விருப்பமான தொடராக உள்ளது. இது ‘கிருஷ்ணகோலி’ என்ற பெங்காலி சீரியலின் தழுவலாகும்.
Advertisment
பாரதி கண்ணம்மா சீரியலில், அருண் பிரசாத், வினுஷா தேவி, ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இதில் அகிலனின் மனைவி அஞ்சலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கண்மனி மனோகரன். இவரும், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார்.
அதன்பிறகு, கண்மனி ஜீ தமிழ் டிவியில் சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
இப்போது கண்மனி, ஜீ தமிழ் டிவியில், அமுதாவும், அன்னலட்சுமியும் சீரியலில் நடிக்கிறார்.
படிப்பறிவு இல்லாத காரணத்தால் பல அவமானங்களை சந்திக்கும் அமுதா, ஒரு வாத்தியாரை தான் கல்யாணம் செய்வேன் என முடிவு செய்கிறார். அதேநேரம் வாத்தியார் குடும்பம் என பெருமையாக வாழ்ந்த அன்னலட்சுமி குடும்பத்தில் எதிர்பாராத சூழ்நிலைகளால் சரிந்து போகிறது. இதனால் தன்னுடைய மகனை வாத்தியாராக்கி குடும்ப பெருமையை மீட்டெடுக்க ஆசைப்படுகிறார்.
செந்தில் தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக வேலை செய்கிறார்.
செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் செய்யும் அமுதா, மகனை வாத்தியார் என நினைத்து பெருமைப்படும் அன்னலட்சுமி என இருக்கும் போது, இருவருக்கும் உண்மை தெரிந்தால் என்னவாகும் என சீரியலின் ஒவ்வொரு கட்டமும் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது.
இதில், செந்தில் என்ற கதாப்பாத்திரத்தில் அருண் பத்மநாபன் நடிக்கிறார். செந்தில் அம்மா அன்னலட்சுமி, கதாபாத்திரத்தில் கருத்தம்மா ராஜஸ்ரீ நடிக்கிறார்.
சீரியலில் பிஸியாக நடிக்கும் கண்மனி, இன்ஸ்டாகிராமிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். இன்ஸ்டாவில் மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்மனியை பின்தொடர்கின்றனர்.
அப்படி கண்மனி பகிர்ந்த சில மாடர்ன், ஹோம்லி படங்கள் இதோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“