கன்னியாகுமரி, இந்தியாவின் தெற்குப் பகுதி. மூன்று கடல்களின் சங்கமம் அமைந்த தனித்துவமான இடமாக விளங்கும் கன்னியாகுமரி, அற்புதமான இயற்கை அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சுற்றுலா தலமாக திகழ்கிறது. கன்னியாகுமரியில் ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காணப்போகும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
விவேகானந்தர் மண்டபம்
/indian-express-tamil/media/media_files/2025/01/22/FWOmEDFHHqywvqxmeGKs.jpeg)
கன்னியாகுமரியில் சுற்றுலா வருபவர்கள் தவறாமல் காணும் முக்கியமான இடம் விவேகானந்தர் மண்டபம். 1893ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி உலகத்தை பிரமிக்க வைத்த தத்துவஞானி விவேகானந்தரின் நினைவாக, பாறை மண்டபம் 1970-ல் அமைக்கப்பட்டது. இந்தியாவின் கலாசார மரபையும் தத்துவ பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கும் இந்த மண்டபம், சுற்றுலாப் பயணிகளின் மனதில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.
திருவள்ளுவர் சிலை
/indian-express-tamil/media/media_files/2025/01/22/3fsZ9YjuGxtjwckEjvx0.jpeg)
விவேகானந்தர் மண்டபத்துக்கு அருகே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. உயர்ந்த பண்புகளை எடுத்துரைக்கும் திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட இந்தப் பிரம்மாண்ட சிலை, 133 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது உலகத் தமிழர்களின் அடையாளமாக திகழ்கிறது.
கண்ணாடி பாலம்
கன்னியாகுமரியின் புதிய சிறப்பு அம்சமாக கண்ணாடி பாலம் அமைந்துள்ளது. விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு கடல் வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், கடலின் சீற்றத்தால் சில சமயங்களில் சென்றடைய முடியாமல் இருந்தனர். இதனைத் தாண்டி பயணிகளை திருவள்ளுவர் சிலை வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வகையில், இந்தியாவின் முதல் கடலுக்கு மேல் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலம் உருவாக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகளுக்குப் புதுமையான அனுபவத்தை வழங்குகிறது.
கண்ணாடி பாலம் பார்ப்பதற்கான செலவு
/indian-express-tamil/media/media_files/2025/01/22/BeQ5HTW8gC1UHBDay7IL.jpeg)
கண்ணாடி பாலத்தில் பயணம் மேற்கொள்ள சில கட்டண திட்டங்கள் உள்ளன:
படகுக்கு சாதாரண டிக்கெட்: ₹75
ஸ்பெஷல் டிக்கெட்: ₹300 (முன்னுரிமையுடன் செல்லும் வாய்ப்பு)
விவேகானந்தர் மண்டப நுழைவுக்கட்டணம்: ₹30
/indian-express-tamil/media/media_files/2025/01/22/72saAeL6hx8oxSrzq6Oo.jpeg)
விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல, முதலில் படகில் செல்ல வேண்டும். மண்டபத்தில் இருந்து கண்ணாடி பாலத்தை நடந்து சென்றபின், அங்கிருந்து திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியும்.
மொத்த செலவு
ஒரு நபருக்கு படகு கட்டணம் மற்றும் நுழைவுக் கட்டணங்களைச் சேர்த்துச் செல்ல ₹105 செலவாகும்.
இந்த புதிய அம்சம், கன்னியாகுமரிக்கு வருபவர்களுக்கு மேலும் ஒரு சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தும்.