scorecardresearch

முடி வளர கரிசலாங்கண்ணி எண்ணெய்

இது முடி உதிர்வைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி நரைப்பதைத் தடுக்கிறது.

lifestyle
Bhringraj oil

ஆயுர்வேதத்தின் படி, உங்கள் தலைமுடி பிரச்சனைகளை சமாளிக்க கரிசலாங்கண்ணி சிறந்த மூலிகையாகும். இதில் சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது முடி உதிர்வைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி நரைப்பதைத் தடுக்கிறது.

கரிசலாங்கண்ணி, உச்சந்தலையில் மற்றும் ஹேர் ஃபாலிக்கிளில், ரத்த ஓட்டத்தை திறம்பட அதிகரிக்கிறது, இது ரத்த விநியோகத்தின் மூலம் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டு வேர்களை வளப்படுத்துகிறது.

கரிசலாங்கண்ணி எண்ணெய் எப்படி செய்வது?

கரிசலாங்கண்ணி இலைகளை பொடியாக நறுக்கி ஒரு கப் தேங்காய் எண்ணெயுடன் கடாயில் போடவும். மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தீயை அணைத்து, எண்ணெயை ஆற விடவும். ஆறியதும் பாட்டிலில் போட்டு வைக்கவும். சில நாட்களுக்குப் பிறகு, எண்ணெயை வடிகட்டவும், இப்போது இலைகள் அவற்றின் ஊட்டச்சத்துக்களை எண்ணெயில் வெளியிட்டிருக்கும்.

வாரத்திற்கு இரண்டு முறை, இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி இரவு முழுவதும் விடலாம். சுமார் நான்கு மாதங்கள் முயற்சிக்கவும்.

கரிசலாங்கண்ணி பொடியுடன் எண்ணெய்

3-4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் பொடியைச் சேர்த்து, அவற்றைக் கலக்கவும். இது இப்போது உச்சந்தலையில் பயன்படுத்த தயாராக உள்ளது. அப்ளை செய்த பிறகு, அதை இரவு முழுவதும் வைத்து அடுத்த நாள் கழுவவும், நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தவும், இது முடி பிரச்சனைகளுக்கு உதவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Karisalankanni how to prepare bhringraj oil